தாக்கல் செய்யப்பட்ட 2 வேட்புமனுக்களுக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளுக்கமைவாக இந்த வேட்பு மனுதாக்கல் இடம்பெற்றிருந்தமையால் இவற்றுக்கு எதிரான ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தொரிவித்தார்.
18 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், 2 வேறு கட்சிகள், 15 சுயேட்சை வேட்பாளர்கள் அடங்கலாக 35 வேட்பாளர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்த தேர்தலில் புதிய ஜனாநாயக முன்னணியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்; செயலாளர் ஹோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுகின்றார்.
மக்கள் விடுதலை முன்னனியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றார். முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஜாத்திக்க ஜனத்தா பக்ஷவின் சார்பில் போட்டியிடுகின்றார்.
அப்பே ஜாத்திக்க பெரமுனவின் சார்பில் சுப்பிரமணியம் குணரத்னம் போட்டியிடுகின்றார். ஸ்ரீலங்கா சமாஜவாதி பக்ஷய கட்சியின் சார்பில் திருமதி.அஜந்த விஜேசிங்க பெரேரா இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு பெண் வேட்பாளர் இவராவார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
ஹில்லயாஸ் ஹய்துறூஸ் மெஹம்மட், அஹமட் அஷன் மொஹமட் அலைவி ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் பணி ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.00 மணிக்கு நிறவடைந்தது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நடைபெற்றது.
வேட்புமனு தாக்கலை முன்னிட்டு காலை 6.00 மணியிலிருந்து தேர்தல் செயலக காரியாலயம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.