தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான குடி நீர்,மின்சார இணைப்புக்கள் என்பன இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ர்த்தகவாணிப கைத்தொழில்,நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின் பெயரிலும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழும் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களால் இன்று (02) தம்பலகம பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன .
மீள்குடியேற்ற செயலணி திட்டத்தின் கீழ் குறித்த பகுதியில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கள் 60, மின்சார இணைப்புக்கள் 80 என மொத்தமாக 140 இலவச இணைப்புக்கள் இதன் போது வழங்கப்பட்டுள்ளன
மேலும் பிரதியமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சதாமியா கிராம அபிவிருத்திச் சங்கம்,அல் ஹிஜ்ரா கிராம அபிவிருத்தி சங்கம் ஆகிய இரு சங்கங்களுக்கான தளபாடங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் தம்பலகாம பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றஜீன் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர்களான நஜீபுள்ளா, ஏ.சீ.நஜிமுதீன், ஆபிலூன்,ஆசிக் உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -