இன்று உலகை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சாதனமாக பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகள் விளங்குகின்றது. இதன் பாவனைகள் நாளாந்தம் கூடிக்கொண்டே செல்கின்றது. இதை இல்லாமல் செய்வோகமாக இருந்தால் இந்த யுகத்திலேயே நாம் செய்யும் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகத்தான் இது இருக்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல இந்த உலகத்திலுள்ள அனைத்து விஞ்ஞானிகளினதும் கருத்தாகும் என்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்தார்.
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையற்ற நாட்டையும் உலகையும் உருவாக்க நாம் ஒவ்வொருவரும் முன்னின்று செயற்படுவோம் எனும் தொனிப்பொருளில் இன்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுகாதார பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தர முகாமைத்து வைத்தியர் எம்.ஜே.நௌபல், சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பி.கே.ரவிந்திரன், சிறு பிள்ளை வைத்திய நிபுணர் திமுது சுபேசின்க மற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மனிய விஞ்ஞானியால் 1898 ஆம் ஆண்டு 'டயச மித்தீன்' என்ற ஒரு பதார்த்தத்தின் மூலம் ஒரு விபத்தாக உருவாக்கப்பட்டு கண்டு பிடிக்கப்பட்டவைதான் இந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாகும். இதன் பாவனையை 1935 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் விடப்பட்டது.
இந்த பொலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டதை ஒரு வரப்பிரசாதமாக மக்கள் நினைத்தனர். இதன் மூலம் பாரிய ஆபத்துக்களை மக்கள் எதிர்நோக்குவார்கள் என்று அவர்களும் நினைக்கவில்லை. அந்த விஞ்ஞானியும் அன்று அறிந்திருக்கவில்லை.
ஒரு விபத்தாக உறுவாக்கப்பட்ட பொலித்தீன் இன்று உலகை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சாதனமாகவும் இதனை முழுமையாக அழித்தொழிக்க முடியாமலும் உள்னர். இதை எரித்தாலும் முழுமையாக இல்லாமல் செய்யமுடியாது. இதனை எரித்து மண்ணுக்குள் முடிவிடுதனால் மழை நீர் பூமிக்கு கீழ் செல்வதை இது தடுக்கின்றது. அதனாலேயே வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமாக இருக்கின்றது.
இதன் பாவனையும் உருவாக்கமும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கின்றதே தவிர, இது குறைந்தபாடில்லை. இதனை நாம் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் எமக்கு மட்டுமல்ல, எமது பிற்கால சந்ததியினருக்கே மிக மிக அதிகமான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதற்கான விழிப்புணர்வை நாம் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் ஏற்படுத்தவேண்டும்.
இந்தியா - சென்னையில் 95 வீதமான பொலித்தீன் பாவனை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனை எமது தீவக நாட்டில் முற்றாகத் தடைசெய்வது மிகச் சுலபமான காரியமாகும். அதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்குமாக இருந்தால் இந்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை இல்லாதொழித்துவிடலாம்.
நாங்களாகவே இந்த பொலித்தீன் வேண்டாம், பிளாஸ்டிக் பொருட்கள் வேண்டாம் என்று தடைசெய்ய முன்நிற்போமாக இருந்தால் இதனை முற்று முழுதாக ஒழித்துக்கட்டவும் எமது எதிர்கால சந்ததியினரின் நல் வாழ்வுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகவே இது இருக்கும் அதற்கான விழிப்புணர்வு முன்னெடுப்புக்களை இன்றிலிருந்து ஆரம்பிப்போம் என்றார்.
இந்நிகழ்வின்போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை இல்லாதொழிப்போம் எனும் விழிப்புணர்வு பற்றிய இருவேட்டை வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்து வைக்கப்பட்டதும், அதனை தயாரித்த வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்களையும் கௌரவித்து ஞாபகச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.