இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் மற்றும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் என்பன செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை 'பூரணத்துவமான ஆளுமைப் பண்புக்கு அடிப்படை அறநெறிக் கல்வியே! ' என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கும் கொடிகளை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தலைமையpலான குழுவினர் வழங்குவதைக்காணலாம்.