தற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்,

ற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை வியாழக்கிழமை (05-092019) பிற்பகல் வந்தடைந்தது. இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் ஆ. உதயராஜன் மற்றும் அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள்.  

தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற எண்ணக் கருவுடன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ஐத்தா தேவபுர என்பரை தலைவராக கொண்ட தன்னார்வ தொண்டர் நிறுவனம் ரோட்டரிக் கழகங்களின் அனுசரணையுடன் இந் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. 

இலங்கையில் நாளொன்றுக்கு தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை 11 பேர் ஆக உள்ளது. தற்கொலை முயற்சிகளை தடுப்பதுடன், மக்களின் உளவள நலனை மேம்படுத்தவும் தற்கொலை எண்ணத்துக்கு தூண்டப்படுபவர்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கி, அதிலிருந்து விடுவிப்பதற்கான வழி வகையினை ஏற்படுத்துவதற்குமாகவே இவ் விழிப்புணர்வூட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிசிசி 1333 என்னும் இலவச ஆலோசனை வழங்கும் தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதனை நோக்காக கொண்டு இலங்கையின் 12 மாவட்டங்களை உள்ளடக்கியதாக தொடர் துவிக்சக்கர வண்டியோட்ட நிகழ்வை நடாத்தி வருகின்றது. 

இத் தொடர் சைக்கிளோட்டமானது திருகோணமலைக்கு வந்தடைந்ததன் பின்னர் நகரின் பிரதான பேரூந்து நிலையத்தில் தற்கொலையின் தாக்கம் குறித்து மக்களை விழிப்பூட்டும் முகமாக நிகழ்ச்சி ஒன்றும் மாலை நடாத்தப்பட்டது. அத்துடன் தற்கொலை மனப்பாங்கை நீக்கக்கூடிய ஆலோசனைகள் 1333 என்ற தொலைபேசி இலக்கம் அடங்கிய கையேடுகளை பொது மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது. இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இவ் விசேட செயற்றிட்டத்தின் விசேட தூதுவராக செயற்படுவதுடன், இவ் செயற்றிட்டம் தொடர்பான தமது கருத்துக்களையும் தொடர்பூடகங்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

Bike ride against Suicide reached Trincomalee

The 1333 Bikeathon Out of the Shadows is a bike ride against Suicide reached Trincomalee Bus Stand today – Thursday {05.09.2019). Rotarians of Trincomalee with their President A.Uthayarajan received the Cycle Riders. This is organized by CCC Foundation along with Rotary Clubs. The purpose of this island vise Ride is to promote the Telephone Line 1333 to escape from Suicide intention. Statistics show that around eleven people die by suicide every day in Sri Lanka. For every one person who dies by suicide, there are ten others who fail in their attempts. The ultimate aim of CCC line 1333 is to reduce the suicide rate in Sri Lanka through education, engagement and empowerment to break the stigma attached to mental illness and contributory social issues. We believe that empowering people to come “Out of the Shadows” and talk about their problems is fundamental in reducing social issues that ultimately lead to suicide. As you already may be aware of The 1333 Bikeathon Out of the Shadows is a bike ride over 1333 kilometres around Sri Lanka to create awareness of the 1333 toll free number operated by CCC line 1333. CCC line 1333 is a confidential and free telephone counselling service to encourage people to talk about their problems whether they be personal, relationship or family issues, schools or work worries, mental illness or suicide thoughts. The service is free and accessible to all people of Sri Lanka and currently average 2000 calls every month. ‘The primary objective therefore is to raise awareness of the toll free 1333 among the communities in Srilanka.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -