கிண்ணியா நகர சபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் புதிய இரு வேலைத்திட்டங்கள் முன்னேடுப்பு


எப்.முபாரக் -
கிண்ணியா நகர சபையினால் அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலை திட்டத்திற்காமைவாக கௌரவ உறுப்பினர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் (200,000/-) ஒதுக்கப்பட்டட்டுள்ளது.
இவ் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் உறுப்பினர் உமர் அலி ரணீஸ் அவர்களால் பெரியாற்றுமுனை வட்டாரத்தில் பெரியாற்றுமுனை, எகுதார் நகர், பெரியகிண்ணியா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக தனக்கு கிடைத்த 200,000/- ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வட்டாரத்திலுள்ள இருளாக காணப்படும் இடங்களுக்கு LED மின் விளக்குகள் பொருத்துவதற்கு 100,000/- ரூபாவையும், எகுதர் நகரில் உள்ள றொக்ஸ் மைதானத்திற்காக அப்பிரதேச இளைஞர்கள், பொதுமக்களின் நலன் கருதி கிரவல் இடுவதற்கு 100,000/- ரூபாவையும் தமது இவ்வாண்டுக்கான(2019) அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளார்.
இவரின் தேர்தல் வாக்குறுதிகளில் இரண்டாவதாக மேற்குறிப்பிடப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
என்பதுடன் சபை மூலம் கிடைக்கும் சம்பளம் முழுவதையும் தமது வட்டார ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்து தனது முதலாவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -