அளவை நிறுவை திணைக்களத்தினால் வருடாந்தம் மேற்கொள்ளப்பட்டுவரும் அளவை நிறுவை உபகரணங்களுக்கு தகுதி நிர்ணய முத்திரை (சீல்) பதிக்குமாறு சகல வர்த்தகர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அளவை நிறுவை பொறுப்பதிகாரி ஏ.எல்.நெளஸாத் அறிவித்துள்ளார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அளவை நிறுவை உபகரணங்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்கின்ற அனைத்து வர்த்தகர்களும் தங்களுடைய அளவை நிறுவை உபகரணங்களான அளவுகோல், தராசு, இலத்திரனியல் தராசு மற்றும் திரவ அளவை உபகரணம் என்பவற்றை சீலிட்டு கொள்ளுமாறு வர்த்தகர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டமாவடி பொதுநூலக கட்டடத்தில் இம்மாதம் 5ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பணியானது எதிர்வரும் 27 ம் திகதிவரை குறித்த இடத்தில் இடம்பெறவுள்ளது.
அளவை நிறுவை உபகரனங்களை சரிபார்த்து சீல் வைக்காமல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற வர்த்தக நிலையங்களுக்கு வருகை தரும் உத்தியோகத்தர்கள் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
