இந்த நிலையில் பதில் நீதவானாக ஹபீப் றிபான் தான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே அரசியல் வாதிகளினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளியும், சமூக சேவைகளையும் கல்குடா பிரதேசத்தில் மேற்கொண்டு வருகின்றார். அது மட்டுமல்லாமல் விசேட தேவை உடையோர் பாடசாலையினையும் பொறுப்பெடுத்து முக்கிய நபராக செயற்பாடுகளில் பங்கெடுத்து வரும் இவர் சமூகத்துடனும், இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பின்னிப்பிணைந்து செயலாற்றக்கூடிய நன்மதிப்பினை பிரதேசத்தில் வளர்த்து வருகின்றார்.
இவ்வாறு இருக்கையிலே இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிசுடன் மிக நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கும் பதில் நீதவான் றிபான், ஹரிசினால் கல்குடா தொகுதிக்கு சுமார் 175 இலட்சம் ரூபா பெறுமதியான அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக செயற்பட்டுள்ளார் என்பதும் முக்கிய விடயமாகும்.
இது இவ்வாறு இருக்கயில்….பதில் நீதவான் ஹபீப் றிபானின் அழைப்பின் பெயரில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசங்களிலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்ககவும், மக்கள்சந்திப்பிற்காகவும் கடந்த 05.07.2019ஆம் திகதி கல்குடாத்தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் வருகை தந்திருந்தார்.
இதன் பொழுது ஹரிசினால் பதில் நீதவான் றிபானின் வேண்டுகோளுக்கு அமைய வட்டாரங்களுக்கான அபிவிருத்திகளுக்கு நிதியொதுக்கீடு செய்து தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸினால் குறித்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முக்கிய விடயமாகும்.
இவ்வாறு கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக தான் அரசியலுக்கு வரும் முன்னரே பல அரசியல்வாதிகளோடும், தலைமைகளோடும் மிக நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி சமூகத்துக்காக பல மில்லியன் ரூபாய்கள் பெருமதியான அபிவிருத்தி பணிகளை தனது பிரதேசத்துக்கு கொண்டு வரும் பதில் நீதவான் றிபான் உடனடியாக அரசியலுக்கு வந்து கல்குடாவில் தலைமைத்துவம் இன்றி கைசேதப்படும் முஸ்லிம் காங்கிரசின் கல்குடாவிற்கான தலைமையினை பொறுப்பெடுத்து மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் கல்குடா முஸ்லிம் காக்கிரஸ் போராளிகளினதும்,செயற்பாட்டாளர்களினதும் வேண்டுகோளாகவும் , விருப்பமாகவும் உள்ளது.
