சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக ஒருவர் பாண்டிருப்பில் கைது


பாறுக் ஷிஹான்-
ட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக 119 அவசர இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை(27) இரவு குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இவ்வாறு சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனம் ஒன்றின் விற்பனை பிரதேச முகாமையாளராக கடமையாற்றி வருபவராவார்.
கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள 288\ஏ மாரியம்மன் கோயில் வீதி பாண்டிருப்பு-2 பகுதி முகவரியாக கொண்ட தில்லைநாதன் ஆனந்தராஜ்(வயது-41) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -