கிழக்குப்பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் போராடம்!!!

ஏஎம் றிகாஸ்-
சம்பள முரண்பாட்டினை நீக்கக்கோரி கிழக்குப்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டத்தினையும் 28.08.2019 முன்னெடுத்தனர்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து பதாதைகளை ஏந்திக்கொண்டு கோஷமிட்டு பிரதான வீதிக்குவந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் மருங்கில் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இப்போராட்டம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது--- பல்கலைக்கழக ஊழியர் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அடிப்படை சம்பளத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்;த்துக்கொள்வது தொடர்பாக 2019.07.30 அன்று தொழிற்சங்க ஒன்றியம் ஒருநாள் அடையாள பணிபகி~;கரிப்பில் ஈடுபட்டது. 31.12.2015 தினத்தன்று அமுலில் இருந்த அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பத்தாயிரம் ரூபாவை சேர்த்து திருத்தம் செய்தவேளை 91.18% சம்பள அதிகரிப்பும், அரச சேவைகள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட வாரியங்கள் சபை ஆகிய நிறுவனங்களின் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் 2016ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 10,000 ரூபாவை சேர்த்து திருத்தம் செய்தவேளை 107% சம்பள அதிகரிப்பும் காணப்படுவதில் இருக்கும் 15% முரண்பாட்டை பல்கலைக்கழக சமூகத்தின் அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கும்படி சாதகமான விதத்தில் அறிவித்திருந்தோம்.
அதன்பின்னர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட முகாமைத்துவ சேவைகள் திணைக்கம் மற்றும் சம்பளம் மற்றும் பதிவு ஆணையம் ஆகியவற்றுடன் 2019.08.16 அன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி கல்வியணிசாரா ஊழியர் சங்க சம்மேளனமும், நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்க சம்மேளனமும் இதன்போது கலந்துகொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2016.09.06 அன்று அப்போதிருந்த உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஊடாக முகாமைத்து சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை அக்கறை செலுத்தாமல் சிரேஸ்ட பேராசிரியர் மற்றும் பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு மட்டுமே இந்த முரண்பாடு நிவிர்த்தி செய்யப்பட்டு 17ஃ2016 (ஏ) சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.
இச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதன் ஊடாக கல்வியணிசார் அணியில் உதவி பேராசிரியர்கள் முதல் விரிவுரையாளர்கள் மற்றும் பதிவாளர் முதல் வேலை உதவியாளர் வரை இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளமை இங்கு விளக்கமாகக் கூறப்பட்டது.அதன்போது இந்த முரண்பாட்டை நிவிர்த்திசெய்வதற்கு பொருத்தமான அறிக்கையை 2019.08.21 அன்று இடம்பெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு நிதி அமைச்சர் அவர்களால் கூறப்பட்டது.
மேலும் கௌரவ அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொழிற்சங்க ஊழியர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலின்போது சம்பள முரண்பாடு பற்றிய எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. இதன்போது மேற்குறிப்பிட்ட அமைச்சர்களால் 2019.08.22 மாலை 4.00 மணிக்கு முன்பதாக இதுதொடர்பான அறிக்கையை தொழிற்சங்க தலைவர்களுக்கு வழங்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும், 2019.08.21 அன்று பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு 2020.01.01 அன்று 107% ஆகக் காணப்பட வேண்டிய பெறுமதி 102.07% ஆகக் குறைந்துள்ளது. இது எமது தொழிற்சங்கத்தால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். செய்யப்படவேண்டிய விடயம் சம்பள முரண்பாட்டை நிவிர்த்திசெய்ய வேண்டியதே ஆகும். அதாவது அனைத்து அரச தாபனங்கள், மற்றும் கூட்டுத்hபனங்களுக்கு 2020.01.01 அன்று 107% ஆக வழங்கப்படவிருக்கும் அடிப்படை சம்பள உயர்வை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்குவதே ஆகும்.
மேற்கண்ட அமைச்சர்கள் சாதகமான விதத்தில் எம்முடன் கலந்துரையாடியதையிட்டு எமது நன்றிகளைத தெரிவித்துக்கொள்கின்றோம். எனினும், எமது வேண்டுகோளுக்கு முரணான விதத்தில் இரண்டு பதவிகளுக்கு மாத்திரம் இந்த முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையானது பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாக பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள் 2019.08.27 நள்ளிரவு 12.00 மணிதல் 2019.08.29 நள்ளிரவு 12.00 மணிவரை 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -