மீராவோடை உதுமான் வித்தியாலயத்திற்கு போட்டோக் கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு.


எச்.எம்.எம்.பர்ஸான்-ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீராவோடை உதுமான் வித்தியாலயத்திற்கு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களினால் போட்டோ கொப்பி இயந்திரம் இன்று (28) வழங்கி வைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த இயந்திரத்தினை பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம்.முபாரக் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கையளித்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அமைச்சரின் இணைப்பாளருமான கே.பீ.எஸ்.ஹமீட், மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார், அமைச்சரின் இணைப்பாளர் ஐ.எம்.றிஸ்வின் உட்பட பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் போன்றோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -