ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
திறந்த வெளி மிருகக்காட்சிசாலையாக ரிதியாகம சப்பாரி பாக் விளங்குகின்றது. இந்த மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்காக இலங்கையில் மாத்திரமின்றி வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் ஏராளமானோர் நாளாந்தம் வருகை தருகின்றனர.; ஆனால் இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளுக்கு போதியளவு வசதிகள் இல்லை என்றும் மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதனால் திட்டமிட்டவாறு சுற்றுலாவினை நிறைவு செய்ய முடியாது போயுள்ளதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர்.
குறித்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்காக வருபவர்கள் சப்பாரி பஸ்கள் போதியளவு இல்லாததன் காரணமாக பல மணித்தியாலங்கள் நின்று கொண்டிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
பலர் பல மணித்தியாலங்;கள் கால் கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டிய நிலை காணப்படுவதுடன் நீண்ட நேரம் எடுப்பதனால் ஏனைய திட்டமிட்ட பிரதேசங்களை பார்வையிட முடியாத நிலை ஏற்படுகின்றது.
இது குறித்த சுற்றுலா பயணிகள் கருத்து தெரிவிக்கையில்
நாங்கள் இந்த திறந்வெளி மிருகக்காட்சிசாலையினை பார்வையிடுவதற்கு மிக தொலைவிலிருந்து வந்துள்ளோம். மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நின்று கொண்டிருந்தும் எனக்கு இன்னும் வாய்ப்புகிடைக்கவில்லை.
இவ்வாறு இதனை பார்யிடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக நாங்கள் சுற்றுலா செய்யவிருந்த பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.
இதனால் எமது பணம் நேரம் ஆகியன வீணாகின்றன.அத்தோடு இந்த திறந்வெளி மிருகக்காட்சிசாலைக்கு மேலும் பறவையினங்கள்,ஊர்வன,பாய்வன போன்ற மிருகங்களின் அலகுகள் விஸ்தரிக்கப்படயிருக்கின்றன.
அவ்வாறு விஸ்தரிக்கும் அதே வேளை மக்களுக்கு தேவையான போதியளவு வசதிகளையும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.