ஆதிப் அஹமட்-மலர்ந்திருக்கும் தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுபெருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அல்லாஹ்வுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் ஒப்பற்ற தியாகம் செய்த எமது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உன்னத செயற்பாட்டை நினைவுபடுத்தி கொண்டாடப்படும் இத்திருநாள் நமக்கெல்லாம் பெரும் படிப்பினையை சொல்லித்தருகிறது.
பல்வேறு நெருக்கடியான சவால்களை இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இன்றைய சூழலில் எமது செயற்பாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக அமைத்துக்கொள்வதும் அவனிடமே அனைத்து சவால்களிலிருந்தும் மீழ இருகரம் ஏந்துவதும் நாம் எல்லோரும் செய்ய வேண்டிய முதன்மை கடமையாகும்.
இன்றைய நந்நாளில் துன்பப்படும் மக்களின் துயர் துடைப்போம்.ஏழைகள், அனாதைகள் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளானவர்களை அரவனைப்போம். நாட்டின் சவால்களை விளங்கி புத்தியுடன் பொறுப்புடன் நடப்போம்.
அனைவருக்கும் மீண்டும் ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் என யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -