அறிக்கையிடல் நாட்டின் பிரச்சினையை வலுப்படுத்தும் கவனமாக செயற்படல் வேண்டும்


களனி பல்கலைக் கழகத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான அருண லொக்குகே இதனைத் தெரிவித்தார்.
எப்.முபாரக்-றிக்கையிடல் நாட்டின் பிரச்சினையை வலுப்படுத்தும் கவனமாக செயற்படல் வேண்டும் என களனி பல்கலைக் கழகத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவரும்,சிரேஷ்ட விரிவுரையாளருமான அருண லொக்குகே இதனைத் தெரிவித்தார்.
முரண்டு பாடுகளின் தாக்கம் மற்றும் அதன் சமூக கலாச்சார விடயங்களின் செயற்பாடுகள் தொடர்பான தலைப்புகளில்
இலங்கை பத்திரிகை பேரவை,மற்றும் ஊடக அமைச்சு ஆகியன இணைந்து திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இன நல்லிணக்க பயிற்சி பட்டரை இன்று(10) திருகோணமலை ஜேகாப் பார்க் விடுதியில் நடைபெற்ற போதே கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

ஊடகவியலாளர்கள் தங்களது செய்திகளின் உண்மையிருக்கும் ஆனால் நமக்கு தெரியாமல் ஒரு சொற்கள் சேர்ந்து விடும் அச்சொற்கள் நமக்கு தெரியாமலே பல முரண்பாடுகளை தோற்றுவிக்க சந்தர்ப்பமாக அமைந்து விடுகின்றன.
இவ்விடயங்களில் அவதானமாக செயற்பட வேண்டும்.பொறுப்புகள் மற்றும் கடமையுடனும் செயற்படுவதோடு அடுத்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவைகள் பார்த்து செயற்பட வேண்டும்.
அறிக்கையிடலின் போது மொழி குலம் போன்றவற்றினை கவனிக்க வேண்டியதோடு சொற்களை நிதானமாக கையாள வேண்டும்.
ஜனநாயம்,மனித உரிமைகள் பின்பற்றப்படல் வேண்டும் .அறிக்கையிடலின் ஊடகமும் நடு நிலையோடு செயற்பட வேண்டும்.
ஒரு சம்பவம் ஏற்பட்டால் தொடர்பு இல்லாத ஒருவரை தொடர்பு படுத்தி அவரை குற்றவாளியாக்குவது ஆரோக்கியமான செயற்பாடுகள் அல்ல பின் தங்கிய மக்களின் குரல்கள் ஒலிப்பதற்காக பாடுபடுங்கள், அம்மக்களின் வளர்ச்சிக்கு முதுகெழும்பாக இருங்கள் சிறப்பாக அறிக்கையிடுங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -