பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு


2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்தினால் அதனுடன் தொடர்புபட்ட மாணவர்கள், இந்த செயற்பாட்டிற்கு உதவி ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் உயர்நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுண்னே தெரிவித்துள்ளார்.

கொடூர பகிடிவதைக்கு எதிராக சட்டத்தில் உள்ள விதிகள் கடுமையானது என்றும் அவர் தெரிவித்தார். 10 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்னார். பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாணவர் ஒருவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு மரணம் அல்லது ஊனமுற்ற நிலைக்கு உள்ளானால் சம்பந்தப்பட்ட பீடாதிபதி முதல் பொறுப்பு கூறவேண்டிய அனைத்து தரப்பினருக்கும் எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் தொல்லைகளின் காரணமாக வருடாந்தம் 2,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு விலகிச் செல்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -