அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் 5 மில்லியன் ரூபாய் நிதியில் சம்மாந்துறை புளக் “ஜே” பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிக் கட்டிடத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்ததுடன், விவசாயிகள், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.
சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் – விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பற்றி அமைச்சருக்கு எடுத்துக்கூறியதுடன், நெயினாகாடு செங்கப்படை அணைக்கட்டினை புனரமைப்பது சம்பந்தமாகவும், சம்மாந்துறையில் புதியதாக நெல் களஞ்சிய கட்டிடம், உரக்களஞ்சிய சாலை என்பன நிர்மாணித்தர வேண்டும். என கேட்டுக் கொண்டார்.
செங்கப்படை அணைக்கட்டினை புனரமைக்க வேண்டிய அனைத்து நடவடிக்கையினையும் மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்ததுடன், ஏனைய விடயங்களையும் விரைவில் செய்து தருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு உறுதியளித்தார்.
இங்கு விவசாயிகளின் மத்தியில் உரையாற்றுகையில் – எதிர்வரும் சிறுபோகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் உத்தரவாத விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரித்து 38 ரூபாவாக இருந்து 43 ரூபா வரை உயர்வடையதுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இனிவரும் காலங்களில் வேளாண்மையை மட்டும் நம்பியிருக்காமல் நீர் தட்டுப்பாடான காலங்களில் பயறு, கௌபி போன்ற பயிர்களைச் செய்து தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம். என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் தயா கமகே, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எஸ்.மோகனராஜா, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் கே.டி. நிஹால் சிறிவர்த்தன, அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் சுகத் கமகே, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். முகம்மட் ஹனீபா, பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.சகுபீர், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், நீர்ப்பாசன மற்றும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிபாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



