பதியத்தலாவ பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு மலசலகூடம் நிர்மாணிக்க நிதியுதவி


எஸ்.அஷ்ரப்கான்-
ம்பாரை மாவட்டம், பதியத்தலாவ பிரதேசத்தில் மலசலகூடம் இல்லாத வறிய குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக, மலசலகூடங்கள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு மலசலகூடங்களை நிர்மாணிப்பதற்குறிய இரண்டாம் கட்ட காசோலை வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (15) கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செலியன் தலைமையில் பதியத்தலாவையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலையினை வழங்கி வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான விமலவீர திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்க பதியத்தலாவ பிரதேசத்தில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -