ஹரீஸ் எம்.பியின் ஏற்பாட்டில் தென்கொரிய பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு



றியாத் ஏ.மஜீத்-
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் தென்கொரிய முன்னாள் பிரதிநிதியமைச்சர் ஓஹ்வாங் யங் தலைமையிலான பல்தேசிய கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுக்குமிடையிலான சந்திப்பு  (24) சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தென்கொரிய பிரதிநிதிகள், இலங்கையில் தென்கொரிய பல்தேசிய கம்பனிகளின் முதலீட்டாளர்கள்முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்தும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பாகவும்இதன்போது கலந்துரையாடினர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் தென்கொரிய பல்தேசிய கம்பனிகளின்முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ள முடியும் எனவும் இதற்கான சகலஏற்பாடுகளையும் எமது அரசாங்கம் செய்துதரும் எனவும் தென்கொரிய பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -