முரண்பாடுகள் தனிமனிதனிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றன! இலங்கை உள்ளுராட்சிமன்ற சம்மேளன செயலர் பிரதீப்.

காரைதீவு நிருபர் சகா-
முரண்பாடுகள் எதுவானாலும் அது ஒரு தனி மனிதனிடமிருந்துதான் ஆரம்பிக்கின்றன. அந்த முரண்பாடு தோன்ற என்னகாரணம் என்பதையறிந்து ஆரம்பத்தில் களைந்துவிட்டால் உலகத்தில் பிரச்சினைகளே இருக்காது.

இவ்வாறு இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளன செயலாளர் எஸ்.பிரதீப் பொத்துவிலில் நடைபெற்ற நிபுணத்துவச்செயலமர்வில் தெரிவித்தார்.
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனமும் அக்ரட்(யுஊவுநுனு) நிறுவனமும் இணைந்து நடாத்திய நல்லிணக்கத்தினூடாக சமுகத்திற்கும் அரசஅதிகாரிகளுக்குமிடையிலான ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் என்ற நிபுணத்துவ செயலமர்வு நேற்று பொத்துவில் பிரதேசசெயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அங்கு அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட காரைதீவு பொத்துவில் லாகுகலை ஆகிய மூன்று பிரதேசசபைகளின் தவிசாளர்கள் செயலாளர்கள் உறுப்பினர்கள் ஆலோசனைக்குழுஉறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு வளவாளரான பிரதீப் மேலும் பேசுகையில்:
எங்கள் ஒவ்வொருவருக்கும் மதம்கடந்த மதிப்பு இருக்கவேண்டும். அதனூடாகவே பொதுநீதியை மனிதத்துவத்தைக் கட்டியெழுப்பமுடியும்.

ஒரு பிள்ளை கருவுற்று பிறப்புவரை பெற்றோர் காட்டுகின்ற அதீதபராமரிப்பு அல்லது கையாளுதல் என்பது ஒவ்வொரு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கவேண்டும். தம்மை இந்த இடத்திற்கு கொண்டுவந்த பொதுமக்களுக்கு சேவையாற்றவேண்டும்.

உறுப்பினர்கள் மற்றும் சமுகஆர்வலர்கள் அரசியலை மையப்படுத்தி சேவையாற்றுவதைவிட மக்களை மையப்படுத்தி சேவையாற்றுவதற்கு வழிவகுப்பதே இந்த நல்லிணக்க ஆலோசனைக்குழுவின் நோக்கமாகும்.எதிர்வரும் 3மாதங்களில் இந்த 3சபைகளிலும் இந்த குழுக்கள் குறித்த துணைவிதிகளுடன் இயங்கவேண்டும். என்றார்.
அங்கு சிறப்புரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிடுகையில்:
உள்ளுராட்சிசபைகள் வலுவிழக்கின்ற சந்தர்ப்பங்களிலும் இந்தச்சபை தொடர்ந்தியங்கும்வண்ணம் குறித்த துணைவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை எமது சபைகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது இந்தசம்மேளனம் குரல்கொடுத்து நீதியைப்பெற்றுத்தரும்.
உள்ளுராட்சி சபை வேறு மக்கள் வேறு அல்ல. இதுவொரு சமுகஸ்தாபனம். எனவே பொதுமக்களை புத்திஜீவிகளை உள்ளீர்த்து இந்த நல்லிணக்க ஆலோசனைசபைகளை அமைத்து முறைப்படி இயங்கவேண்டும்.
இச்செயமர்வை நடாத்திய பிரதீப் தமிழில் பேசினாரா? சிங்களத்தில் பேசினாரா? என்று தெரியாதவண்ணம் இருமொழிகளிலும் சரமாரியாக பொரிந்துதள்ளினார். பாராட்டுக்கள்..என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -