ஆரையம்பதி வைத்தியசாலை அபிவிருத்தி, மஞ்சந்தொடுவாயில் புதிய தாய் சேய் பராமரிப்பு நிலையம் மற்றும் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலக்கான புதிய வைத்தியப்பிரிவு மற்றும் மின் பிறப்பாக்கி கையளிப்பு

எம்.ரீ. ஹைதர் அலி-
ன்று (30.08.2019) கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்கள் நாங்கள் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க ஆரையம்பதி வைத்தியசாலைக்கும் மற்றும் மச்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின்போது வைத்தியசாலைகளின் குறைபாடுகள் சம்பந்தமாகவும் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது. மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலை தரம் உயர்த்துவது பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆராய்ச்சி வைத்தியசாலையில் விடுதியில் தங்காது நாளாந்த சிகிச்சையினை பெறும்விதமான நாளாந்த சிகிச்சைப் பிரிவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது
மேலும் இவ்வைத்தியசாலைக்கு மிக நீண்டநாள் தேவையாகயிருந்துவரும் மின்பிறப்பாக்கி (Generator) ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் தாய்சேய் பராமரிப்பு நிலையம் ஒன்றும் அமைப்பது சம்பந்தமாக முன்மொழிவொன்றினை ஏற்கனவே முன்வைத்திருந்ததற்கமைவாக அதற்கு மஞ்சந்தொடுவாயில் அமைந்துள்ள காணியையும் இராஜாங்க அமைச்சர் பார்வையிட்டார்.

இன்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் அவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு தொகுதி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் பொறியியலாளருமான M. ஷிப்லி பாறூக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைபரப்புச் செயலாளருமான ULMN. முபீன் அவர்களும் யூனானி வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஜலால்டீன், முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் மர்சூக் அஹமட்லெப்பை, முன்னாள் காத்தான்குடி பள்ளிவாசல்களின் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் MI ஆதம்லெப்பை மௌலவி, காத்தான்குடி முதியோர் இல்லத் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் KMA அஸீஸ் மற்றும் முக்கிய ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -