கல்முனையில் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளரின் சுவரொட்டிகள்

பாறுக் ஷிஹான்-
க்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் நம்பிக்கை தரும் நம்பகரமான வேட்பாளர் என குறிப்பிட்டு சனிக்கிழமை(24) மாலை பரவலாக கல்முனை நகரப்பகுதி பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
இச்சுவரொட்டிகள் யாவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு திடிரென ஒட்டப்பட்டுள்ள இச்சுவரொட்டிகள் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சுவரொட்டிகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -