சகல சௌபாக்கியங்களும் நிறைந்த எமது இலங்கை தேசத்தில் இஸ்லாம் எடுத்துக்கூறும் நல்லிணக்கம், ஒற்றுமை, சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு நிறைந்த மக்களாக இஸ்லாம் போதிக்கும் சிறந்த இஸ்லாமியர்களாக இலங்கை முஸ்லிங்கள் வாழவேண்டும். தியாகத்தின் விதைகளில் உருவான இஸ்லாத்தில் கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலை பின்பற்றும் நாம் இஸ்லாமிய வரலாற்றின் தியாக பக்கங்களை நன்றாக அறிந்தவர்கள்.
தியாகத்தின் வரலாற்றை கௌரவிக்கும் முஸ்லிங்களின் பெருநாளாகிய புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் உலகில் வாழும் அத்தனை முஸ்லிங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் அக மகிழ்வுடன் அறிவித்து கொள்கிறேன்.
இந்த புனிதமிகு நாளில் இலங்கை, மற்றும் உலகில் யார் யாரெல்லாம் மிக கடுமையான துன்பங்களை அனுபவித்து கொண்டு கஷ்டத்தில் வாழ்கிறார்களோ அவர்களின் சகல கஷ்டங்களும் நீங்கி அவர்களுக்கு இறைவனின் கருணைப் பார்வை கிட்டவும், தினம் தினம் அரசியலின் இலக்குகளுக்காக மரணத்தை சுவைத்துக்கொண்டிருக்கும் பலஸ்தீன், காஸ்மீர் உறவுகளுக்கு இறைவனின் உதவியும், திருப்பொறுத்தமும் கிடைத்து நிம்மதியான வாழ்வுக்கு வெகுவிரைவில் திரும்பவேண்டும் என எல்லாம் வல்ல கருணை நாயகன் அல்லாஹ்வை வேண்டிக்கொள்கிறேன்.
அனைவருக்கும் புனித ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் நல் வாத்துக்கள் !!
அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர்
தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர்
தேசிய காங்கிரஸ்.
தவிசாளர், அல் - மீஸான் பௌண்டஷன்
ஸ்ரீலங்கா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -