திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்கும் நிலையொன்று தோன்றியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவிப்பு.



எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்கள் சிந்தித்து தீர்மானம் எடுக்கும் நிலையொன்று தோன்றியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கந்தளாய் மீடியா, மற்றும் கந்தளாய் பசுமை பெண்கள் அமைப்பு ஆகியன நடாத்திய ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு விழா நேற்று(14) மாலை கந்தளாய் அல் தாரீக் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இலங்கை விரைவில் இரண்டு தேர்தல்களை எதிர்நோக்க இருக்கின்றோம் ஒன்று மாகாண சபை மற்றையயொன்று ஜனாதிபதி தேர்தலாகும்.
இத்தேர்தல்களை அனைத்து சிறுபான்மை கட்சிகளும் சிந்தித்து செயற்படவுள்ளதோடு நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் அதேபோன்று சிறு பான்மை கட்சிகளும் நிதானத்தோடு செயற்பட வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களாகிய நாம் நமது பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டும் எமது வாக்கினை கூட்டிக்கொள்வதன் மூலமே நமதுஉரிமைகளை வெற்றடுக்க முடியும்.
முதலில் எந்தத் தேர்தலும் வந்தாலும் நாம் சிந்தித்து நிதானத்தோடு முஸ்லிம் மக்கள் செயற்பட வேண்டும் அண்மைய சம்பவங்கலெல்லாம் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்தி விட்டது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று தான் நாம் ஒற்றுமையை கடைப்பிடித்து தேர்தலில் சிறந்த பாடத்தினை வெளிக்காட்ட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ்,கந்தளாய் பிரதேச சபையின் உதவி தவிசாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.மதார்,கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.ஜவாஹிர்,ஏ.ஏ.பாஹிர் மற்றும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களான என்.எம்.கே.சுபார்கான்,ஜெஸில் மௌலவி மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -