29 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படவேண்டும்- அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் தீர்மானம்


பாறுக் ஷிஹான்-
ல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தற்போதுள்ள 29 கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக முழுமையான அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் தீர்மானம் சிறிய சலசலப்பிற்கு மத்தியில் நிறைவேற்றியுள்ளது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் விசேட கலந்துரையாடல் மகா சங்கத்தின் தலைவர் கே.சந்திரலிங்கம் தலைமையில் கல்முனை பல்தேவை கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை(4) மாலை நடைபெற்றது.
இதில் கல்முனை பிரதேச சிவில் அமைப்புக்களின் பிரதிநதிகள் மற்றும் பொதுநல அமப்புக்களின் பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தற்போதுள்ள 29 கிராம சேவகர்பிரிவுகளை உள்டக்கியதாக தரம் உயர்த்தவதை தமிழர் மகாசங்கம் வரவேற்கின்றது. அத்துடன் எல்லை நிர்ணயம் தொடர்பில் மகாசங்கம் தொடர்ந்தும் தனது ஆலோசனைகளையம்இ முன்னெடுப்புக்களையும் வழங்கிக்கொண்டிருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -