வாகரை வடமுனை முதல் கஞ்சிகுடிச்சாறு வரை ஏழைமாணவர்களுக்கு 100 வண்டிகள் கையளிப்பு!
காரைதீவு நிருபர் சகா
பிரித்தானியாவில் பிரதான செயற்பாட்டைக் கொண்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கடந்த இருதினங்களாக வாகரை தொடக்கம் கஞ்சிகுடிச்சாறு வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு 100 சைக்கிள்களை பகிர்ந்தளிக்கப்பட்டன.
யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ரி. சத்தியமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் இணைப்பாளர் டாக்டர் மதி (லண்டன்) மற்றும் மகப்பேற்றுவைத்தியநிபுணர்களான டாக்டர் ரி.திருக்குமார் டாக்டர் துஷ்யந்தன் பொதுவைத்தியநிபுணர் டாக்டர் சுரேஸ்
டாக்டர் குண.சுகுணன் மற்றும் பல நிபுணர்கள் பங்குபற்றி கல்வியின் முக்கியத்துவம் சார்ந்த விழிப்புணர்வையும் செய்திருந்தார்கள்.
ஆலையடிவேம்பு கண்ணகிபுரத்தில் அந்த கிராமத்திலேயே முதலாவதாக சட்டத்துறைக்கு தெரிவாகியுள்ள மாணவி ஒருவரை பாராட்டியதுடன் அவருடைய பல்கலைக்கழக முழுச் செலவையும் டாக்டர் ரி. சத்தியமூர்த்தியினுடைய அமைப்பு ஏற்றுக் கொண்டது.
அந்த மாணவர்களின் விழிகளில் தெரிந்த மகிழ்ச்சியும் கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியர்களின் நன்றி கலந்த செயற்பாடுகளும் இந்தஇருநாளில் மன நிறைவைத் தந்ததாக வைத்தியர்குழாம் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்தது.


