காணிக்கச்சேரிகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கியும் இன்னும் பெருந்தொகையான மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றது


 திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு.

எப்.முபாரக்-
காணிக்கச்சேரிகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கியும் இன்னும் பெருந்தொகையான மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
திருகோணமலையில் 2050 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(14) திருகோணமலை மெக்கேசர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இந்த ஐக்கிய தேசியக் கட்சி மக்களுக்கு பாரிய உதவிகளையும்,வீட்டுத் திட்டங்களையும் கையளித்து வருகின்றது அதேபோன்று தான்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலே பட்டதாரிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது சந்திரிக்கா அமையார் மற்றும் மகிந்த ராஜ பக்ஸ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் இவ்வாரான செயற்பாடுகள் நடைபெறவில்லை,ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் நலன் மேல் அக்கரை கொண்டே இதனை மேற்கொள்கின்றது.
இந்நாட்டின் பிரதம மந்திரி பலேவேறு வகையான கருத்திட்டங்களை முன்னெடுத்து செல்கின்றார்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களானஇரா.சம்பந்தன்,மற்றும் துரைரெட்ணசிங்கம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் வழம்பெற்று வருகின்றது.காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வுகளை இடைநிறுத்தி விடக்கூடாது என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -