காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் 36வது வருட நிறைவையொட்டியும் அமரர்களான முன்னாள்பிரதேசபை உறுப்பினர் கு.மகாலிங்கசிவம் திருமதி சுபானுமதி மகாலிங்கசிவம் தம்பதிகளின் ஞாபகார்த்தமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்திவந்த 20-20 ஓவர் மாபெரும்கடினபந்துகிரிக்கட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது விளாஸ்ரர் விளையாட்டுக்கழகம் சாம்பியன் கிண்ணத்தைச்சுவீகரித்தது.
பிராந்தியத்தின் பிரபல 16 விளையாட்டுக்கழகங்கள் கலந்துகொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகஅணியும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக அணியும் மோதின.
இப்போட்டி (20) சனிக்கிழமை பிற்பகல் காரைதீவு விபுலாநந்தா மைதானத்தில் காரைதீவுவிளையாட்டுக்கழகத்தலைவர் எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.
இறுதிப்போட்டி மற்றும்பரிசளிப்புவிழாவிற்கு பிரதமஅதிதியாக நோர்வே ஆர்.பரமேஸ்வரன் கௌரவ அதிதிகளாக கழகப்போசகர்களான உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் வே.இராஜேந்திரன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.
இறுதிப்போட்டியில் பங்கேற்ற காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகஅணியை சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக அணி 16ஓட்டங்களால் வெற்றிகொண்டது.
வெற்றிபெற்ற அணிக்கு 20ஆயிரம் ருபா பணப்பரிசும் சாம்பியன் கிண்ணமும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. றன்னர்ஸ்அப் அணிக்கு 10ஆயிரம் ருபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது.





