கல்முனை வடக்கு உப பிரதேசசெயலகத்திற்கு நியமிக்கப்பட்ட பூரண அதிகாரம் கொண்ட கணக்காளர் வருகையில் தாமதம்நிலவுகிறது.
(15) திங்கட்கிழமை செயலகத்திற்கு கணக்காளர் வருகைதரவில்லை. பிரதேச செயலாளர் எ.ஜே.அதிசயராஜா கடமையில் இல்லை.
உள்நாட்லுவல்கள் அமைச்சின் கடிதமும் திறைசேரி முகாமைத்துவதிணைக்களத்தின் அனுமதிக்கடிதமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம்அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரனைச்சந்தித்து உண்ணாவிரதிகளான சிவஸ்ரீ. க.கு சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்ஆகியோர் நன்றி தெரிவித்தவேளை அவர் இக்கடிதங்களைக்காட்டியுள்ளார்.
முறைப்படி நியமனக்கடிதம்அமைச்சிலிருந்து அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றதும் கணக்காளர் குறித்த செயலத்திற்கு அனுப்பிவைக்கப்படுவாரெனத் தெரியவருகிறது.
பெரும்பாலும் (16)செவ்வாய்க்கிழமை பூரணை விடுமுறை தினமாகையால் 17) புதன்கிழமை புதிய கணக்காளர் பதவியேற்கலாமெனத்தெரியவருகிறது.
புதிய கணக்காளர் காரைதீவைச் சேர்ந்தவரென்று தெரியவருகிறது.
