கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் குப்பைகளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் கூடிய விரைவில் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை முதலீட்டுச் சபை, ஹேலீஸ் பீரி சோன் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அதனை உரிய காலத்துக்குள் மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிடின், அந்த நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட குப்பைகள் அடங்கிய 130 கொள்கலன்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து ஹேலீஸ் நிறுவனம் விடுவித்து, கட்டுநாயக்க பிரதேசத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
