புனித நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 'தகபலல்லாஹூ மின்னா வமின்கும்'


எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம்களின் நிம்மதி யான இஸ்லாமிய வாழ்விற்கு வழியமைக்கும் நன்நாளாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் விரோத சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைவாக
இலங்கைத் திருநாட்டின் அமைதி மற்றும் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை என்பன பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டில் அமைதி ஏற்படுவதற்கும் முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்விற்கும் அன்னிய சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டு மக்கள் மத்தியில் சமத்துவம், சகோதரத்துவம், சுபீட்சம், இனங்களுக்கிடையிலான ஐக்கியம் என்பவற்றை ஏற்படுத்தி ஒரு தேசத்து மக்கள் என்ற வாஞ்சையோடு வாழச் செய்வதோடு முஸ்லிம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற திருநாளாகவும் இப்புனித நோன்புப் பெருநாள் அமைய வேண்டும்.
மேலும் ரமழான் மாத்தில் பேணிவந்த நற்பண்புகளையும், நற்செயல்களையும், இறை அச்சத்தையும் எமது வாழ்நாள் முழுவதும் பேணிவருவதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றவர்களாக மாற முயற்சிப்போமாக.
நோன்புகாலத்தில் செய்த நல்லமல்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெறுவதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் புனித இஸ்லாம் மார்க்கத்தின் நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்து மரணிப்பதற்கும் இறைவன் அனைவருக்கும் அருள் புரிய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -