கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட விதமும் அரசியல்வாதிகள் கூறும் பொய்களும்.


நஸீர் ஹாஜி-

01. சட்ட விரோத தமிழ் பிரதேச செயலகம் ஆயுத முனையில் உருவாக்கப்பட்டது: கல்முனையில் சட்டப்படி அனுமதி இல்லாத ஒன்றை 1989.04.12 ல் ஆயுதமுனையில் உருவாக்கி அதற்கு தமிழ் பிரதேச செயலகமென தாங்களாகவே பெயர் சூட்டி 2017ல் "முனையம்" எனும் பெயரில் 30 வருடமாக இயங்குவாதாக வரலாறும் எழுதி மலர் வெளியிட்டார்கள்.
1992ம் ஆண்டின் 58ம் இலக்க பிரதேச செயலக உருவாக்கம் பற்றிய அறிவில்லாத, தனது பதவியின் "புறட்டகால்" புரியாத அம்பாரை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபராக இருந்த விமலநாதன் என்பவரால் 2018.09.10ல் "கல்முனை வடக்கு" என பாவிக்குமாறு.தனக்கு இல்லாத அதிகாரத்தை பாவித்து அதிகார துஷ்பிரயோகம் சிய்துள்ளார்.

02. சட்ட பூர்வமாக ஒரு பிரதேச செயலகம் உருவாக வேண்டுமானால், 1992ம் ஆண்டின் 58ம் இலக்க பாராழுமன்ற சட்டத்தின்கீழ் அதன் பெயர் எல்லை என்பவைகளை வைத்து அமைச்சர் வர்த்தத மானியில் பிரசுரிக்க வேண்டும் ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் இது பின்பற்றப்படவில்லை.
03. தமிழ் பிரதேச செயலகம் 2017ல் "முனையம்"என மலர் வெளியிட்டுவிட்டு தற்போது கல்முனை வடக்கு என்று கடிதத்தலைப்பு பாவிக்கின்றார்கள் .அது வர்த்மாதனியில் பிரசுரிக்க படவில்லை.

04. அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால் ஒப்பமிடப்பட்ட HAF2/6/ADSTR/ 08/0601 எனும் 20.08.2009ம் திகதிய கடிதத்தில் திரு க.லவனாதன் அவர்களை கல்முனை பிரதேசசெயலகத்தின் உப பிரதேச செயலாளராக கடமையேற்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

அவர் 02.09.2009ம் திகதி கல்முனை பிரதேச செயலலாளர் M,M.நவுபல் அர்கள் முன் உப பிரதேச செயலாளராக அவர் கடமையேற்றுள்ளார். அக்கடிதத்தில் தமிழ் என்ற சொல்லை லவனாதன் இடைசிருகல் செய்துள்ளார்.

05. 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டத்தின் 9ம் பந்தியில் பிரதேச செயலாளரிடமிருந்து கடமைப்பட்டியலை பெற்றே உபபிரதேச செயலாளர் இயங்கவேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால் அப்படி ஒரு கடமை பட்டியல் அங்கு இல்லை.
06.கடமைப்பட்படியல் இல்லாத, சட்டப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்படாத ஒரு கற்பனை கந்தோரில் 217 பேர் கடமை செய்வதாகவும், மாதம் சுமார் 500000/-சம்பளமும், ஏனைய செலவும் என தகவாலறியும் சட்டத்திகீழ் கேட்டபோது தெரிவித்துள்ளார்கள்.
07. அந்தவகையில் கடமைப்பட்டியல் இல்லாத ஒரு கற்பனை கந்தோருக்கு 1989 முதல் இன்றுவரை ஆளணி போட்டவர்கள், நிதி வழங்கியவர்களான அமைச்சின் செயலாளராக, மாவாட்ட செயலாளராக, பிரதேச செயலாளர்களாக. உப பிரதேச செயலாளர்களாக இயங்கியவர்கள், இயங்குபவர்களை விசாரணை செய்யபட வேண்டும்.

08. கல்முனை தமிழ் பிரதேச செயலகமென பெயர்ப் பலகை, கடிதத்தலைப்பு, இறப்பர் இலட்சனை பாவிக்கீன்றார்கள், தற்போது கல்முனை வடக்கு என பாவிக்குமாறு உள்ளக சுற்று நிரூபம் வெள்யிட்டு கடிதத்தலைப்பும் பாவிக்கின்றார்கள்.
09. இதுபற்றி தகவலறியும் சட்டத்தின் கீழ் உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சால் தரப்பட்ட

+ கல்முனை வடக்கு என கெசட் பண்ண வில்லை,
+ கல்முனை தமிழ் என்றும் கெசட் பண்ணப்பட வில்லை,
+ கல்முனை இலங்கை வங்கி வீதியில் இயங்குவது உப பிரதேச செயலகம், கல்முனை.
+உப எனும் சொற் பிரயோகத்தை பயன்படுத்தாமல் பிரதேச செயலகம் எனும் சொல்லை பாவிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
+ உப பிரதேச செயலகம், கல்முனை என்றே இயங்க வேண்டும் ,
இவ்வாறு 14.01.2019ம் திகதிய HAF2/15/RIT-01(VOI-1) எனும் இலக்க கடிதத்தில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

10. கல்முனை உப பிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்கள் கல்முனை வடக்கு என எங்கும் அங்கிகரிக்காத செயலாளரால் நிராகரிக்கப்பட்ட வடக்கு என்ற சொற்பதத்தை 04.02.2019 முதல் பாவிக்குமாறு உள்ளக சுற்று நிருபம் வெளியிட்டுள்ளார்.

11. ஆனால் உபபிரதேச செயலாளர் அதிசயராஜ் அவர்கள் 01.03.2019ல் கல்முனை பிரதேச செயலாளர் முன் உப பிரதேச செயலாளராக பதவியேற்பதற்கு பதிலாக அமைச்சின் செயலாளரது அங்கிகாரத்துக்கு மாற்றமாக தான் தோன்றித்தனமாக கல்முனை வடக்கு என கடமையேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கு கல்முனை பிரதேச செயலாளர் அவர்கள் " முரண்பட்ட அலுவலக பெயர்களை பயன்படுத்தி அலுவலகங்களையும், பொதுமக்களையும் குளப்ப நிலைக்கு உட்படுத்தாமலும். தாங்கள் விரும்பியவாறு அலுவலகத்தின் பெயரை பயன்படுத்தாமலும் அலுவலகத்தின் அங்கிகரிக்கப்பட்ட பெயரான உப பிரதேச செயலகம், கல்முனை என அலுவலக கடிதத்தலைப்பு பதவிமுத்திரை பயன்படுத்துமாறு எழுத்துமூலம் 29.01.2019ம் திகதி அறிவித்துள்ளார்.
அதற்கு 2.2.2019ம் திகதி இச்செயலகமானது சுயாதீன மாகவும். தனி நிர்வாக அலகாகவும் சுமார் 30 வருடமாக இயங்கி வருகிறது. இதன் கடிதத்தலைப்பும் கல்முனை தமிழ் பிரிவு என்றும் சில இடங்களில் கல்முனை வடக்கு என்றும் காணப்படுகிறது என்று விதண்டாவாதமாக உப பிரதேச செயலாளர் எழுதியுள்ளார்.

இனவாத தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளதும், மட அரச அதிகாரிகளதும் பொய்யை நம்பி ஏமாந்தது போதும்.

கோடீஸ்வாரன் பாராளுமன்றில் கர்ஜித்து தமிழ் மக்களை உசுப் பேத்துவது இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அல்ல. வாக்காளர்களை உசுப்பேத்தி வாக்குகளை பிடுங்க. மையத்து வீட்டில் ஒப்பாரிவைத்து மையம் உயிர்பெற போவதில்லை அரசியல்வாதிகள் பாராளுமன்றில் கர்ஜித்தது பிரச்சினைக்கு தீர்வுகாணஅல்ல. பிச்சக்காரண் புண்போல அதன் அசறை பித்து வாக்கு பிச்சை எடுக்க.

அன்பின் கல்முனையின் தமிழ். முஸ்லிம். சிங்கள உடன்பிறப்புகளே!

நாம் கல்முனையான் என்ற தலைப்பின் கீழ் ஒன்றுபடுவோம். நம்மை இனரீதியாக பிரித்தாளும் வங்குரோத்து அரசியலுக்கு சாவுமணி அடிப்போம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -