கடந்த 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் ஒரு அங்கமாக இன்று (27-06-2019) திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேச சபையின் சார்பில், தலைவர் வைத்திய காலாநிதிஞானகுணாளன் தலைமையில், பிரதேச சபை ஊழியர்களுக்கும் சனசமூக நிலைய உறுப்பினர்களுக்கும் " போதை மருந்து "சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
ஜனாதிபதியின் போதைப் பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுசெயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் குறித்தும் அவர்களைமீட்பதற்காகவும் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையிலே இளைஞர்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், போதைப் பொருளுக்குஅடிமையாயாகாமல் இளைஞர்ககளை எப்படி பாதுகாக்கலாம் மற்றும் பெற்றோர்களினதும் சமுதாயத்தினதும் கடமைகளை வைத்திய காலாநிதி ஞானகுணாளன் எடுத்துக் கூறினார்.