அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்ட வடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதுபற்றி வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அந்த உத்தியோகத்தர் தொடர்ந்தும் அதோ தொனியில் வடிக்கையாளர்களிடம் கடிந்து கொண்டு நடந்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிருப்தியடைந்த இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வியாபாரம் மற்றும் தனி வங்கிக் கணக்குகளை மூடிவிட்டு, இலங்கை வங்கியைத் தவிர்ந்து வேறு வங்கிகளில் தங்களின் வியாபாரம் மற்றும் தனியான கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வங்கியைத் தவிர, வேறு வங்கியில் கடமையாற்றுகின்ற உயர் அதிகாரிகள் மற்றும் அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எல்லோரும் மிக அன்பான முறையில் பணிவான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நடந்துகொள்வதாகவும் இந்த முறைமை இலங்கை வங்கியில் கடமைற்றுகின்றவர்களிடம் இல்லை எனவும் வங்கி வடிக்கையாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எனவே, மக்களுக்காகத்தான் வங்கியுள்ளது, வங்கிக்காக மக்கள் இல்லை, என்பதையும் இலங்கை வங்கி உத்தியோகத்தர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
வாடிக்கையாளர்களின் வரி மற்றும் வட்டி பணத்திலேயே தான் அவர்களின் மாதாந்த ஊதியம் மற்றும் மேலதிகக் கொடுப்பணவு போன்றவற்றைப் பெற்று வருகின்றார்கள் என்பதையும் அவர்கள் ஞாபத்தில் வைத்துக்கொண்டு நடந்துகொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக, இலங்கை வங்கியின் உயர் அதிகாரிகள் குறித்த விடயங்களை கவனத்திற்கொண்டு அட்டாளைச்சேனை வங்கிக் கிளையில் கடமையாற்றும் அந்த உத்தியோகத்தருக்கு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கை வங்கி வடிக்கையாளர்களின் அதிருப்தியும், விசனமும் கூடிச்செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை