அரசுப் பதவி வகிக்கும் 3 இஸ்லாமியர்களை பதவி நீக்கக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக அதுரலிய ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டன் நீக்ரோதாரம விகாரையின் தலைமை விகாராதிபதி தலைமையில் 03.06.2019 அன்று காலை ஆதரவு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் அட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் மத வேறுபாடுகள் கலைத்து பங்குபற்றியதுடன் மத சார்பற்று மத குருமார்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது காலை 10 மணியளவில் அட்டன் நகரில் உள்ள நீக்ரோதாராம விகாரையில், இருந்து பேரணி ஆரம்பமாகி அட்டன் பஸ் நிலையம் வரை சென்று பின் விகாரையை நோக்கி பயணித்த பேரணி அட்டன் மத்திய மணிக்கூட்டுக்கு அருகில் உள்ள புத்தரின் உருவசிலைக்கு மலர்கள் வைத்து உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆசி வேண்டி விசேட வழிபாட்டையும் மேற்கொண்டனர்.
அத்துடன், இப்பேரணிக்கு வலு சேர்க்கும் வகையில் அட்டன் நகரலில் சிலர் தமது வியாபார ஸ்தலங்களை மூடியிருந்தமை குறிப்பிடதக்கது.