பிரதமரின் செய்தியை எடுத்துக் கொண்டு கல்முனை சென்றோரை துரத்தி அடித்த உண்ணாவிரதக் குழுவினர்

பாறுக் ஷிஹான்-

ல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர்.

இச்சம்பவம் இன்று(21) மாலை கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மதியாபரணம் சுமந்திரன் கோடிஸ்வரன் ஆகியோரை போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தூசித்து துரத்தினர்.

பிரதமரிடத்தில் இருந்து வந்த விசேட செய்தியினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமைச்சர் மனோ கணேசன் தயாகமகே ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அப்பகுதிக்கு சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து வாசித்து காட்டினர்.

அதன் பின்னர் அங்கு மக்களுடன் கலந்துரையாடிய மேற்குறித்த அமைச்சர் குழு பிரதமரிடம் இருந்த பெற்றுக்கொண்ட செய்தியையும் அங்கு அழுத்தமாக அறிவித்தது.

இதன் போது கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தமிழர்களின் கோரிக்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியுள்ளார் என அறிவித்து மக்களிடம் கூறிய வேளை திடிரென தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதனால் மேற்குறித்த அமைச்சர்களின் பாதுகாப்பு தரப்பினர் அவர்களை பொதுமக்களின் தாக்குதலில் இருந்து அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி அழைத்து சென்ற போதிலும் குறித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது.

மேலும் குறித்த பிரதேச செயலகம் தொடர்பாக அமைச்சர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் கடிதங்களை பொதுமக்கள் போராட்டகாரர்கள் நிராகரித்து கிழித்து எறிந்தனர்.

அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உரிய தீர்வு கிடைக்க பெறாத விடத்து நஞ்சு குடித்து சாவதற்கு தயாராக உள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது அங்கு வந்த அமைச்சர் குழு கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பான இறுதி முடிவினை ஆராய்ந்து இவ்விரு சமூக பிரதிநிதிகளும் முன்வர வேண்டும் தெரிவித்து நகர்ந்தனர்.

மீண்டும் தாக்குதலில் இருந்து தப்பியவர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செய்தியோடு வந்த எம்.எ.சுமந்திரன் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது உலங்குவானூர்தியின் மூலம் தப்பி சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -