இல‌ங்கை ம‌க்க‌ளின் க‌லாசார‌ ஆடை எது? - முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னி உல‌மா க‌ட்சி


து ப‌ற்றி சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் நான் எழுதினேன். அது ம‌ஹிந்த‌ ஆட்சியின் போது. இப்போது இதே ஆட்சியிலும் சுற்றிச்சுற்றி இக்கேள்வியே எழுகின்ற‌து.
பொதுவாக‌ உல‌கில் வாழ்ந்த‌ முத‌ல் ம‌னித‌ர்க‌ளின் க‌லாசார‌ ஆடை என்ப‌து இலை குலைக‌ளாகும். இல‌ங்கையில் வாழ்ந்த‌ ஆதாம் ஏவாள் இவ்வாறே அணிந்த‌ன‌ர்.
பின்ன‌ர் ம‌னித‌ன் த‌ன‌து ப‌சியை தீர்க்க‌ மிருக‌ங்க‌ளை வேட்டையாடினான். அத‌ன் தோல்க‌ளை த‌ன‌து ஆடையாக்கிக்கொண்டான். ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே ம‌ட்டும் ம‌றைப்ப‌தே இல‌ங்கை ம‌னித‌னின் க‌லாசார‌மாக‌ இருந்த‌து (உதார‌ண‌ம் சீகிரிய‌ ஓவிய‌த்தை பார்க்க‌வும்) மிக‌ நீண்ட‌ கால‌ங்க‌ள் ம‌னித‌னின் ஆடை இப்ப‌டித்தான் இருந்த‌து.
இல‌ங்கையில் வாழ்ந்த‌ ம‌னித‌ இன‌ம் ப‌ல்கிப்பெருகி ப‌ல‌ நாடுக‌ளுக்கும் சென்ற‌து. சீனாவில் வாழ்ந்த‌ ம‌னித‌ன் ப‌ருத்தி ஆடையை க‌ண்டு பிடித்த‌பின் அந்த‌ ஆடை ம‌னித‌னின் க‌லாசார‌மாக‌ மாறிய‌து. ஆயினும் இடுப்புக்கு கீழ் ம‌ட்டும்தான். வேடுவ‌ர்க‌ள் அண்மை கால‌ம் வ‌ரை இப்ப‌டித்தான் இருந்தார்க‌ள்.

அத‌ன் பின் இஸ்லாமிய‌ போத‌க‌ர்க‌ள் உருவான‌ போது ம‌னித‌ன் இடுப்புக்கு மேலும் ஆடை அணிய‌ ப‌ழ‌கினான். நூஹ் எனும் நோவோ, இப்ராஹிம் எனும் எப்ர‌ஹாம், மூசா எனும் மோசெ, ஈசா எனும் ஜீச‌ஸ் போன்ற முஸ்லிம்க‌ளின் வ‌ர‌லாற்று சிற்ப‌ங்க‌ள் ம‌னித‌னின் க‌லாசார‌ ஆடையை காட்டுகின்ற‌ன‌.
இத‌ன் ப‌டி ஆண் நீண்ட‌ அங்கியையும் பெண் க‌றுப்பு அங்கியையும் அணிந்தார்க‌ள்.
ஆனாலும் இந்திய‌ உப‌க‌ண்ட‌த்தில் நாக‌ரிக‌ம் முன்னேற‌வில்லை. ச‌மீப‌ கால‌ம் வ‌ரை இந்தியாவில் முஸ்லிம்க‌ளைத்த‌விர‌ ம‌ற்ற‌ பெண்க‌ள் மார்பை முற்றாக‌ திற‌ந்தே வாழ்ந்த‌தாக‌ வ‌ர‌லாற்று குறிப்புக்க‌ள் சொல்கின்ற‌ன‌.

முஹ‌ம்ம‌து ந‌பியின் வ‌ருகைக்கு பின்ன‌ரான‌ இல‌ங்கையில் முஸ்லிம்க‌ளின் க‌லாசார‌ம் என்ப‌து ஆண் ஒரு வெனிய‌னும் கீழே சார‌மும் தொப்பியும் அணிந்த‌ன‌ர். முஸ்லிம் பெண்க‌ள் நீள‌மான‌ பிட‌வையால் த‌ம்மை முழுக்க‌ போர்த்தி உடை அணிந்த‌ன‌ர்.
இந்துப்பெண்கள் ர‌விக்கை இல்லாத‌ சாரி அணிந்த‌ன‌ர். ஆண்க‌ளை பொறுத்த‌வ‌ரை த‌த்த‌ம‌து சாதிக்கேற்ப‌ ஆடை அணிந்த‌ன‌ர். சில‌ சாதிக‌ள் இடுப்புக்கு மேல் ஆடை அணிய‌ அனும‌தி இருக்க‌வில்லை.
சிங்க‌ள‌ ம‌க்க‌ளை பொறுத்த‌வ‌ரை இக்கால‌த்தில் ஆண்க‌ள் சார‌ம் சேட்டும், பெண்க‌ள் பாவாடையும் ர‌விக்கையும் ம‌ட்டுமே அணிந்த‌ன‌ர். கட‌ந்த‌ 2 நூற்றாண்டின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து இதை தெரிந்து கொள்ள‌லாம்.

ஐரோப்பிய‌ரின் வ‌ருகையை தொட‌ர்ந்து இல‌ங்கை ம‌க்க‌ளின் ஆடை க‌லாசார‌த்தில் மாற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌து. சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் சார‌ம் சேட், கோட் என்ப‌து அறிமுக‌மாகிய‌து. இந்து ஆண்க‌ள் வேட்டி அணிந்த‌ன‌ர். பெண்க‌ள் சாரி அணிந்த‌ன‌ர். இந்துப்பெண்க‌ள் அண்மைய‌ கால‌ம் வ‌ரை கிராம‌ங்க‌ள ர‌விக்கை அணியாம‌லேயே வாழ்ந்த‌ன‌ர். இத‌னை முத‌ல் ம‌ரியாதை திரைப்ப‌ட‌த்தில் பார‌திராஜா விள‌க்கியுள்ளார். ஆனால் முஸ்லிம் பெண்க‌ள் ர‌விக்கை அணிந்து உட‌ம்பு முழுவ‌தும் போர்த்தும் ஆடையை இல‌ங்கையின் சுத‌ந்திர‌த்துக்கு பின்ன‌ர் வ‌ரை அணிந்த‌ன‌ர். (இல‌ங்கை மியூசிய‌த்துக்கு சென்றால் பார்க்க‌லாம்).
1960க‌ளில் இல‌ங்கை பெண்க‌ள் ம‌த்தியில் மினி ஸ்கேட், குட்டை க‌வுண் என்ற‌ ஆங்கிலேய‌ க‌லாசார‌ ஆடை அறிமுக‌மாகிய‌து. ப‌டித்த‌ ஆண்க‌ள் கோட் சூட், ட்டைக்கு மாறின‌ர்.
60க‌ளில் வெளிவ‌ந்த‌ இல‌ங்கையின் சினிமா ப‌ட‌ங்க‌ளில் இத‌னை காண‌லாம்.
(இங்கு நான் சினிமாக்க‌ளை உதார‌ண‌மாக‌ காட்டுவ‌த‌ன் கார‌ண‌ம் அண்மைக்கால‌ங்களில் இல‌ங்கை முஸ்லிம்க‌ளின் ஆடை க‌லாசார‌த்தை த‌மிழில் கேள்விக்குட்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் த‌மிழ் ம‌க்க‌ளே என்ப‌த‌னால்த்தான்).

ஆனாலும் முஸ்லிம் பெண்க‌ள் புட‌வை (சாரி அல்ல‌) க‌ட்டுப‌வ‌ர்க‌ளாக‌வே வாழ்ந்த‌ன‌ர். புட‌வைக்கும் சாரிக்கும் நிறைய‌ வித்திய‌சம் உண்டு.

1970க‌ளுக்கு பின் இந்தியாவிலிருந்து சாரிக‌ள் இற‌க்கும‌தியாக‌ தொட‌ங்கிய‌ பின் முஸ்லிம்க‌ளும் சாரி அணிந்த‌ன‌ர். அதுவும் இப்போது அணிவ‌து போன்றில்லாம‌ல் இடுப்போ, கைக‌ளோ தெரியாத‌ அள‌வு சாரியை அணிந்து முக்காட்டால் த‌லையை முழுவ‌தும் ம‌றைப்பார்க‌ள்.

பின்ன‌ர் வ‌ட‌ இந்திய‌ க‌லாசார‌ம் சினிமாக்க‌ள் ஊடாக‌ இல‌ங்கையில் அறிமுக‌மாகிய‌து. த‌மிழ், முஸ்லிம்க‌ள் ம‌த்தியிலும் ச‌ல்வார் க‌மீஸ் புகுந்த‌து. ச‌ல்வார், க‌மீஸ் என்ற‌ சொற்க‌ள் கூட‌ த‌மிழ் மொழி சொல் அல்ல‌. உறுது அல்ல‌து ஹிந்தி மொழி சொல். அக்கால‌ ந‌வீன‌ முஸ்லிம் இள‌ம் பெண்க‌ள் ச‌ல்வார் அணிந்து சோலால் மார்பை ம‌ட்டும் ம‌றைத்துக்கொண்ட‌ன‌ர். கிராம‌ங்க‌ளில் த‌லையை மூடும் ப‌ழ‌க்க‌ம் இருந்த‌து.

அக்கால‌த்தில் பிரா என‌ப்ப‌டும் மார்புக்க‌ச்சை இருக்க‌வில்லை. அதை அறிமுக‌ப்ப‌டுத்திய‌து ஆங்கிலேய‌ராகும். இன்று 50 வ‌ய‌தில் இருப்போரின் அம்மாக்க‌ள் எவ‌ரும் பிரா அணிய‌வில்லை.
இவ‌ற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது இல‌ங்கைய‌ரின் ஆடை க‌லாசார‌ம் என்ப‌து இதுதான் என‌ குறிப்பிட்டு சொல்ல‌ முடியாது. அது கால‌த்துக்கு கால‌ம் மாறி வ‌ந்துள்ள‌து.
த‌ற்போது நாம் வாழும் சூழ‌லில் சிங்க‌ள‌, இந்து பெண்க‌ள் க‌வுன் ஜீன்ஸ், ந‌ன்றாக‌ இறுக்கிய‌ உட‌லின‌ள‌வை ச‌ரியாக‌ காட்டும் ஜீன்ஸ் , 1960க‌ளில் சினிமா ந‌டிகைக‌ளின் உள்ளாடையாக‌ இருந்த‌ லெக்கின் இப்போது வெளி ஆடையாக‌வும் ஆங்காங்கே வ‌ய‌தான‌ பெண்க‌ள் சாரியும் அணிகிறார்க‌ள். அதுவும் முன்னைய‌ சாரிக‌ள் அல்ல‌. ர‌விக்கை இருக்கிற‌தா என்று ச‌ந்தேக‌ப்ப‌டும் அள‌வு சாரிக‌ள் அணிகின்ற‌ன‌ர். அதே நேர‌ம் முஸ்லிம் பெண்க‌ள் த‌ம‌து முழு உட‌லையும் ம‌றைக்கும் வித‌த்தில் இயேசு ந‌பியின் தாயார் புனித‌ ம‌ரியாள் போன்று க‌றுப்பு ஆடையும் ஆண்க‌ள் இயேசு ந‌பி அணிந்த‌து போன்று நீண்ட‌ ஆடையும், வாலிப‌ர்க‌ள் ப‌ல‌ர் தூங்கும் போதும் லோங்ஸ், ஜீன்ஸ் (உள்ளே அவிந்து நாற்ற‌ம‌டிப்ப‌தை வாச‌ம் என‌ எண்ணி) அணிகின்ற‌வ‌ர்க‌ளாக‌வும் உள்ள‌ன‌ர்.
இந்த‌ நிலையில் நீங்க‌ள் 30 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் சாரி (பிட‌வை) அணிய‌லாம் இப்போது அத‌னை அணிய‌ முடியாதா என‌ கேட்கின்ற‌ன‌ர்.
நான் கேட்கிறேன். உங்க‌ளின் ஆண்க‌ள் 40 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வேஷ்டி, சார‌ம்தானே அணிந்தார்க‌ள். இப்போது ஏன் லோங்ஸ் ஜீன்ஸ் என‌ வெளிநாட்டு உடையில் திரிகிறீர்க‌ள். உங்க‌ள் பெண்க‌ள் 40 வ‌ருட‌த்துக்கு முன் லெக்கின்ஸ், க‌ட்ட‌ க‌வுன் அணிய‌வில்லையே. இப்போது ஏன் அத‌னை அணிகிறீர்க‌ள்.?
ஆக‌, ஆடை க‌லாசார‌ம் என்ப‌து கால‌த்துக்கு கால‌ம் மாறும். அதை வைத்து ஒருவ‌ரை ம‌ற்ற‌வ‌ர் அட‌க்கியாள‌ முற்ப‌ட‌ கூடாது. அடுத்த‌வ‌ருக்கு ஆபாச‌த்தை உண்டாக்காத‌ வ‌கையில் ஆடை அணிவ‌து ஒவ்வொருவ‌ரின‌தும் சுத‌ந்திர‌மாகும்.
கால‌ப்போக்கில் ஆடையில் மேலும் மாற்ற‌ங்க‌ள் வ‌ர‌லாம். ஐரோப்பிய‌ பெண்க‌ள் போன்று ஜ‌ட்டி, பிராவுட‌ன் அலையும் இல‌ங்கைப்பெண்க‌ளையும் நாம் அல்ல‌து ந‌ம‌து ப‌ர‌ம்ப‌ரை காண‌ வேண்டி வ‌ர‌லாம். அப்போது ஜ‌ட்டி, பிரா அணிந்த‌வ‌ர்க‌ளே பாட‌சாலைக்குள் வ‌ர‌லாம் என்று ச‌ட்ட‌மும் வ‌ர‌லாம். அதற்குள் நாம் ம‌ர‌ணித்தால் நாம் கொடுத்து வைத்த‌வ‌ர்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -