அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை- மொரவெவ பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (27) ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம். அமான் தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பிளவுபட்டுள்ள மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியின் ஆலோசனையின் பேரில் சபை உறுப்பினர் வை. டி. ஜெனீர்தீன் அவர்களின் நிதியுதவியுடன் இந்த இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், மொரவெவ வெவ பிரதேசத்திலுள்ள விகாரைகளின் விகாராதிபதிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ உயர் அதிகாரி கிராம மக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.