யாரோ சர்வதேச தீவிரவாதி செய்த செயலுக்கு ஏன் பள்ளிகளை தாக்குகின்றீர்கள்


வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என். நஸீர் (MA) கண்டனம்
ன்மை காலமாக இலங்கையில் நடைபெற்றுவரும் சர்வதேச தீவிரவாத செயலுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித சம்மந்தமுமில்லை என்று ஜனாதிபதி சொன்ன பிறகும் முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.
நேற்று இரவு குருநாகல் மாவட்டத்தின் கின்னியம, பூவெல்ல, யாயவத்த, கரந்தி பொல, குளியாப்பிடிய ஆகிய இடங்களில் உள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிகள், வீடுகள் என பல்வேறு இடங்கள் தாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கீழ்தரமான செயற்பாடுகள் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் சமூகங்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் இப்படியான தீவிரவாத தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனவே இந்த நாட்டை மீண்டும் பின்னோக்கி நகர்த்த சில அன்னிய சக்திகள் முயற்சி செய்து வருகின்றது இவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இந்த நாட்டை நிர்வகிப்பவர்களின் கடமையாகும்.
சட்டம் அனைவருக்கும் ஒன்று என்பதை இந்த நாட்டில் உள்ள ஒரு இனவாத குழு மறந்து விட்டது இவர்களுக்கு யார் ஆதரவு வழங்கினாலும் அவை அனைத்தும் நிச்சயமாக கண்டிக்கப்படவேண்டியதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -