நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு புரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
நாட்டில் தற்போது தலை தூக்கியுள்ள பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு புரண ஒத்துழைப்பை வழங்குவதுடன் அரசினால் முன்னெடுத்துச் செல்லப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்க முன்வரவேண்டும்.
இவ்வாறு மனங்களை இணைக்கும் ” ரண் மாவத் ( தங்கப் பாதை ) திட்டத்தின் கீழ் காபட் இடப்பட்டு அபிவிருத்திசெய்யப்படவிருக்கும் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிவிற்குட்பட்ட ” சந்தை வீதி ”யின் நிர்மாணப்பணிகளைஉத்தியோக புர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கல்முனைத்தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளரும் கல்முனை பிராந்திய அபிவிருத்தக்குழுஇணைத்தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுமக்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகளைஎக்காரணம் கொண்டும் இடைநிறுத்த முடியாது. அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்ஆலோசனையின் பேரிலும் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரம சிங்க அவர்களின் வழிகாட்டலிலும் அரசாங்கம்முன்னெடுக்கும் பாரிய அளவிலான வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்கள் காலடிக்கு கொண்டு சேரக்க வேண்டிய பாரியஅபாறுப்பு மக்கள் பிரதிநிதிகளான எங்களையே சாரும்.
சந்தர்ப்பம் ஒன்று வரும் போது அதனை உதாசீனம் செய்து விட்டு பின்னர் மீண்டுமொருமுறை இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை பெறமுடியாது.இன்று மக்களின் அதிதியவசியமான தேவைகளுள் வீதிகள் , வடிகான்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

கல்முனை , சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களிவுள்ள வீதிகள் சுருங்கி தற்போது ஒழுங்கைகளாகவும் , ஓடைகளாகவும் மாறி வருவது மிகவும் மன வேதனையை தருகின்றது. வீட்டுக்கு படி கட்டி, படிக்கு சுவர்கட்டி , சுவருக்கு படி கட்டி இவ்வாறு வளவுகள் நீண்டு இன்று வீதிகளால் போக்குவரத்து செய்ய முடியாத நிலைக்கு நிலமை மாறி வருகின்றது. இந்த நிலமை மக்கள் மனங்களில் இருந்து மாற வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமேயானால் எதிர்கால சந்ததியியனருக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு எம் அனைவரையுமே சாரும்.என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -