சமூக வலைத்தளங்களில் இனவாத பிரசாரம்: எம்பிலிபிட்டிய மாவட்ட நீதிவான் பதவியிலிருந்து இடை நிறுத்தம்

ம்பிலிபிட்டிய மாவட்ட நீதிவான் டினேஸ் லக்மால் பெரேரா பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இனவாத பரப்புரைகளுக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இவ்வாரு பதவி இடை நிறுத்தப்ப்ட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக் குழு தகவல்கள் தெரிவித்தன.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக இன நல்லுறவை பாதிக்கும் வகையில் கருத்துக்களை பரிமாரியமை தொடர்பில் குறித்த மாவட்ட நீதிபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே நீதிச் சேவை ஆணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில் பதவி இடை நிறுத்தம் செய்ய முன்னர் குறித்த மாவட்ட நீதிபதியிடம் நீதிச் சேவை ஆணைக் குழு, விளக்கம் கோரியுள்ள நிலையில் சமூக வலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை தான் பகிரவில்லை என அவர் விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்ரது.

இந் நிலையிலேயே விசாரணைகளுக்காக அவர் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். (Virekesari)


நீதிபதி தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக கருதப்படும் ஒரு பதிவில் ...

கர்மா - முன் வினைப் பயன்

நீங்கள் செய்கின்ற,
சொல்கின்ற விடயங்கள் தான்
மறுபடியும் உங்களுக்கு நடக்கும்.

Aazath Atham Lebbe

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -