வெசாக்கை முன்னிட்டு கல்முனை தமிழ்பிரதேச செயலகம் நீராகாரம் வழங்கல்!



காரைதீவு  சகா-

வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகத்தினர் தேசிய இளைஞர்சேவைமன்றத்தின் அனுசரணையுடன்   செயலகமுன்றலிலுள்ள பிரதானவீதியில் பிரதேசசெயலாளர் எ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நீராகாரம் வழங்கினர். 

பிரதமஅதிதியாக கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் கலந்துகொண்டு அலுவலக ஊழியர்களுடனும் இளைஞர்களுடன் இணைந்து பானங்களை வழங்கிவைத்தனர். வீதியில் சோதனைக்கடமையிலீடுபட்டிருந்த கடற்படையினருக்கும் நீராகாரம் வழங்கினர். 

வீதியால்வந்த மக்களை மறித்து பானங்களை வழங்கியதைக்காணலாம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -