எம்.எம்.ஜபீர்-
கல்வி அமைச்சின் 300 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில்; 1200 இருக்கைகளை கொண்டதாக சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் கேட்போர் கூடத்தினை நேற்று சுகாதார இராஜாங்க அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் இக்கேட்போர் கூடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் திறந்து மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
இதற்கமைய நிர்மாணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் நிர்மாண பணிகளை பூர்த்தி செய்யுமாறு ஒப்பந்தகார்களிற்கு பணிப்புரை வழங்கியதுடன் மேலதிக தேவைகளையும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது கல்வி அமைச்சின் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பொறியியலாளர் ரீ.அருள்ராஜ், அல்-அஷ்றக் தேசிய பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஜாபீர், சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.எம்.எம்.அன்சார், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.