குறித்த பதவிகள் பங்கீட்டு முறைப்படி வழங்கப்படவேண்டும் என்று கோரப்பட்டிருப்பதாலும் பாலமுனைக் கிராமத்தில் இருந்து விகிதாசர முறைமையின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளமையாலும் குறித்த உறுப்பினர் இம்மாதம் இராஜினாமாச் செய்யவிருப்பதால் அவ்விடத்திற்கு அட்டாளைச்சேனை அரபா வட்டாரத்தில் போட்டியிட்ட முன்னாள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் மருந்தாளர் அப்துல் முனாப் சபை உறுப்பினராக நியமிக்கப் படவிருக்கிறார்.
அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனைப் பிரதேச ஆதரவாளர்களின் அதிகமானோர் குறித்த வேட்பாளரான அப்துல் முனாபை அவசரமாக சபைக்கு அனுப்பவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் காரணமாவது: அட்டாளைச்சேனை பிரதேச எல்லைகளுக்குள் அரசின் கம்பெரலிய வேலைத்திட்டத்தில் சிலர் கொமிசனுக்காக வீதிகளைக் கொண்டு வந்து விலைபேசி விற்றுக்கொண்டிருப்பதாகவும் அதன் மூலம் சரியான தரத்திலான வீதிகள் அமைக்கப்படாமல் கொமிஷன் பிசினஸ் மட்டுமே சரியாக நடந்து கொண்டிருப்பதாகவும் முறைப்பாடு தெரிவித்து இதனை சபையில் தட்டிக்கேட்பதென்றால் இவரால்தான் முடியும் அடுத்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து குறித்த உறுப்பினர் இம்மாத இறுதியில் அல்லது ஜூன் மாதம் ஆரம்பத்தில் தனது உறுப்பினர் பதவியை அவசரமாக இராஜினாமாச் செய்வார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.