அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அபாண்டம் சுமத்தும் இனவாத ஊடகங்களை வன்மையாக கண்டிக்கிறோம்


வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் 

மூகவலைத்தளங்கள், தொலைக்காட்சிகளில் இனவாத கருத்துக்களையும் மக்களை குழப்பும் வகையிலான செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடையமாகும்.
" கௌரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களை தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முற்றிலும் உண்மைக்கு புறம்பான , ஆதாரங்களும் அற்ற செய்தி தொடர்பில் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவர் என்ற வகையில் எமது மாவட்டம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மூவின மக்களோடும் சகிப்புத்தன்மையோடும் , சரியான புரிதலோடும் பேதங்கள் அற்ற முறையில் செயலாற்றுகின்ற தனித்துவமான பண்பினைக் கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும் , அவர் முற்று முழுதாக வெறுக்கின்ற , கண்டிக்கின்ற மிலேச்சத்தனமான பண்புகளை கொண்ட தீவிரவாத குழுக்களோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டு மக்களை குழப்புகின்ற செயற்பாட்டை முன்னெடுப்பது மிகவும் கீழ்த்தரமானதும் மோசமானதுமான ஒரு செயற்பாடாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
சிறுதும் சிந்திக்காது எவ்வித ஆதாரங்களும் அற்றதான உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியினை ஊடக தர்மத்தினை எல்லாம் புறம் தள்ளி விட்டு வெறும் அரசியல் காழ்ப்புணர்வுகளை மையமாக வைத்து வெளியிடுவது ஊடகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கும் கேலிக்குட்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
அத்துடன் நமது நாட்டின் அமைதி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக கிறிஸ்த்தவ அமைப்பின் தலைவர் கௌரவத்துக்குறிய மல்கம் ரஞ்சித் மற்றும் ஏனைய மதத்தலைவர்களோடும் , அரசியல் பிரதிநிதிகளோடும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன், இன்று வரையும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் சார் விடயங்களை முன் கொண்டு வரும் ஒருவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மட்டுமே.
நமது நாட்டின் இறையாண்மைக்கும் , இன ஒற்றுமைக்கும், அமைதிக்கும் குந்தகம் ஏற்படக்கூடிய வகையிலான செயற்பாடுகளை ஒருபோதுமே கொண்டிராத ஒருவராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் உள்ளார்கள்.

எப்போதும் அமைதியையும், சமாதானத்தையும் சமத்துவத்தையும் அதிகம் நேசிக்கும் எமது அமைச்சர் அவர்கள் ஒரு போதும் அரசியலுக்காக இன மத பேதம் பார்த்து செயலாற்றிய , அதற்காக இனவாத கருத்துக்களை மக்கள் மத்தியிலே விதைத்த வரலாற்றை கொண்டவர் கிடையாது.

அனைத்து இன மக்களையும் சமமாகவும் , சகோதர வாஞ்சையுடன் அரவணைத்து நாட்டின் அமைதிக்கும் சக வாழ்விற்கும் தன்னை அர்ப்பணித்து வரும் ஒருவர்.
இதேவேலை இன மத பேதங்கள் கடந்து நாட்டு மக்களுக்காக செயலாற்றும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு இவ்வாறான பொய்யான செய்திகள் மூலமாக அபகீர்த்தியை ஏற்படுத்தி , அவரை மக்களை விட்டும் தூரப்படுத்தி விடலாம் என கங்கணம் கட்டிக் கொண்டு குறித்த ஊடகங்கள் செயற்படுவது முட்டாள்தனமானதும் பிழையானதுமாகும்.
அந்த சம்பவம் தொடர்பில் துரிதகரமான புலனாய்வு விசாரணைகள் பாதுகாப்பு தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை குழப்பும் விதமாக இவ்வாறான ஊடகங்கள் மூலமாக வெளியிடப்படுகின்ற விசமத்தனமான செய்திகளுக்காக வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்ற வகையிலும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் தலைவர் என்ற வகையிலும் எமது குருநாகல் மாவட்ட மக்கள் சார்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வடமேல் மாகாணசபை உறுப்பினர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவர்,
சதொச பிரதி தலைவர்.
எம்.என்.நஸீர் (MA)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -