கட்சியின் செயற்பாடுகள் வட்டாரக்குழுக்களின் தீர்மானத்துக்கு அமையவே இடம்பெறும். -உயர்பீட உறுப்பினர் யஹ்யாகான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் முன்னெடுக்கப்படவுள்ள பிரதேச அபிவிருத்திகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வட்டாரங்களுக்கு என அமைக்கப்படும் வட்டாரக் குழுக்களின் தீர்மானத்துக்கு அமையவே இடம்பெறும் என்றும் மந்தமான நிலையில் இந்தப் பிரதேசத்தில் சென்றுகொண்டிருக்கும் கட்சியின் செயற்பாடுகளை மீண்டும் உத்வேகத்துடன் செயற்படுத்தவுள்ளதாகவும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் 18 ஆம் வட்டார அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் தெரிவித்தார்.

சாய்ந்தமருது 18 ஆம் வட்டாரத்துக்கான வட்டார கிளைகளை புனரமைக்கும் நிகழ்வுகள் 2019-04-06 ஆம் திகதி சமூக செயற்பாட்டாளரும் கட்சியின் உயரபீட உறுப்பினருமான யஹ்யாகான் அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. மூன்று வெவ்வேறு நிகழ்வுகளாக இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேட்க்கண்டவாறு தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் சிதைவடைந்துள்ள கட்சியின் முன்னெடுப்புக்களை மிகுந்த உத்வேகத்துடன் முன்னெடுக்கவேண்டிய தேவை உள்ளதாகவும் கடந்தகாலங்களில் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர்கள் கட்சியை வழிநடத்தியதன் காரணமாகவே சில பின்னடைவுகளை சந்தித்ததாகவும் சாய்ந்தமருது விடயத்தில் தலைவர் மிகுந்த கருசணையுடன் இருப்பதாகவும் தான் சாந்தமருது மக்களின் மனோநிலையை பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கியுள்ளதாகவும் எதிகாலத்தில் இம்மக்களின் தாகம் தீர்க்கப்படுவதற்கான சகுணம் நெருங்கிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

நமது மக்களின் எதிர்பார்ப்பை அடைந்துகொள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசே சரியான தெரிவு எனத்தெரிவித்த யஹ்யாகான் அதன் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை விடயமாக பல்வேறு அழுத்தங்களை தான் கொடுத்துவருவதாகவும் இந்தவிடயமாக உண்மையான அக்கறையுள்ளவர்கள் தனது முயச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வின் இறுதியாக நடப்பு ஆண்டுக்காக 18 ஆம் வட்டாரத்துக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

குழுவின் போசகராக தவிசாளர் ஏ.எல்.ஏ.மஜீட் அவர்களும் அமைப்பாளராக ஏ.சி.யஹ்யாகான் அவர்களும் ஆலோசகராக ஏ.எல்.றசீட்,செயலாளர் எம்.ஐ.பைசால்,பொருளாளர் ஏ.சி.எம்.றியால்,உபதலைவர் ஏ.ஜலால்தீன், உப செயலாளர் ஏ.சி.சமால்டீன், கொள்கைபரப்புச் செயலாளர் ஏ.ஆர்.காலிலுல் றஹ்மான் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்களாக எம்.எம்.ஏ.மஜீத்,எம்.யை.எம்.ஹுசைன்,யூ.எல்.எம்.ரஸ்ஸாக் ஏ.எல்.சீனன்துரை ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

18 ஆம் வட்டாரத்தின் மகளிர் காங்கிரஸின் நிர்வாகிகளும் தெரிவாகினர் இதில் அமைப்பாளராக ஏ.சி.சியானாவும் செயலாளராக ஏ.எல்.எப்.சர்பானாவும் பொருளாளராக ஏ.சி.எப்.ரஸ்மியும் கொள்கைபரப்புச் செயலாளராக எம்.ஐ.எம்.றிஸ்க்காவும் உதவி மகளிர் அமைப்பாளராக ஏ.சுல்பிக்காவும் உதவிசெயலாளராக ஏ.பரீதாவும் ஏகமனதாக தெரிவாகினர்.

நடப்பு வருடத்துக்காக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் தெரிவாகினர் இதில் இளைஞர் அமைப்பாளராக எம்.ஏ.எம்.ரஸ்பால், செயலாளர் எம்.எச்.எம்.அனீஸ்,பொருளாளர் எம்.எம்.அமான்,பிரதி இளைஞர் அமைப்பாளர்,எம்.எஸ்.எம்.சும்றி,உப செயலாளர் ஆர்.எம்.இல்ஹாம் மற்றும் கொள்கைபரப்புச் செயலாளராக எம்.பி.எம்.சியாம் ஆகியோரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பாட்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -