கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளதால் நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
ட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இடம்பெற்ற ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியமை ஊடாக பொலிஸார் அந்த ஊழியர்களின் உரிமையை மீறி இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புவனேக அலுவிஹாரே, விஜித்த மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இவ்வாறு வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி காயமான 15 பேர் இணைந்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவுக்கே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு நபருக்கு 250,000 ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர, பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த 15 மனுதாரர்களுக்கும் 50,000 முதல் 75,000 ரூபா வரை அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தாக்கல் செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியம் சம்பந்தமான திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிராகவே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -