முஸ்லிம்க‌ள் அர‌பி க‌லாசார‌த்தை பின்ப‌ற்றுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் இஸ்லாமிய‌ க‌லாசார‌த்தையே பின்ப‌ற்றுகிறார்க‌ள்.


ர‌பு க‌லாசார‌த்துக்கும் முஸ்லிம் க‌லாசார‌த்துக்குமிடையில் நிறைய‌ வேறுபாடு உண்டு. முஹ‌ம்ம‌து ந‌பிய‌வ‌ர்க‌ள் அர‌பு க‌லாசார‌த்தின் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை உத‌றித்த‌ள்ளினார்க‌ள்.

சிலை வ‌ண‌க்க‌ம், முத‌ல் பெண் குழ‌ந்தையை கொல்லுத‌ல், அரை நிர்வாண‌ம், ஆண் பெண் க‌ல‌ந்து ஆடுத‌ல், ப‌ர‌ம்ப‌ரை பெருமை அடித்த‌ல், வ‌ர‌லாற்று ப‌கையை வைத்து கொலை செய்த‌ல் என‌ நிறைய‌ அர‌பு க‌லாசார‌த்தை வெறுத்தொதுக்கி புதிய‌தோர் க‌லாசார‌த்தை க‌ற்றுத்த‌ந்தார்க‌ள்.

இன்றைய‌ அர‌பிக‌ளிட‌மும் இந்த‌ வித்தியாச‌த்தை காண‌லாம். உண்மை முஸ்லிமான‌ அர‌பிக‌ளின் க‌லாசார‌த்துக்கும் முஸ்லிம் அல்லாத‌ அர‌பிக‌ளின் க‌லாசார‌த்துக்கும் இடையில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌.

க‌லாசார‌ம் என்றால் உட‌னே சில‌ரின் மூளையில் ப‌டுவ‌து ஆடை ம‌ட்டும்தான். ஆடை என்ப‌து க‌லாசார‌த்தின் ஒரு துளிதான். இந்த‌ வ‌கையில் முஸ்லிம்க‌ளின் ஆடை க‌லாசார‌ம் என்ப‌து இஸ்லாம் சொன்ன‌த‌ன்ப‌டி ஆணும் பெண்ணும் த‌ம் மான‌த்தை ம‌றைப்ப‌துதான். இது உல‌க‌ளாவிய‌ முஸ்லிம்க‌ளின் பொதுவான‌ ஆடைக்க‌லாசார‌மாகும்.

ஆடை அணித‌ல் என்ப‌து நாட்டுக்கு நாடு வேறுப‌ட்ட‌தாக‌வே சுமார் 50 வ‌ருட‌த்துக்கு முன் இருந்த‌து.

த‌ற்போது பெரும்பாலான‌ முஸ்லிம்க‌ள் ஐரோப்பிய‌ர் அறிமுக‌ப்ப‌டுத்திய‌ சேட், லோங்ஸுக்குள்ளும் புகுந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ள் ம‌ட்டும் த‌ம் ச‌மூக‌ க‌லாசார‌ ஆடைக‌ளை பெரும்பாலும் அணிகின்ற‌ன‌ர். த‌ற்கால‌த்தில் அர‌பு ம‌க்க‌ள் ஆண், பெண் கூட‌ சேட், ஜ‌ம்ப‌ர், ஜீன்ஸ் என‌ மாறிவிட்ட‌ன‌ர்.

எகிப்து, லெப்னான், சிரியா போன்ற‌ அற‌பு நாடுக‌ளில் சில‌ கிராம‌ங்க‌ளில் த‌விர‌ ஜுப்பாவை காண‌ முடியாது. இது அர‌புக்க‌ளின் ப‌ல‌வீன‌மாகும். அவ‌ர்க‌ள் த‌ம‌து க‌லாசார‌த்தில் வைத்திருந்த‌ ப‌ற்றுத‌ல் குறைந்து வ‌ருகிற‌து.

முன்ன‌ரெல்லாம் ம‌த்திய‌ கிழ‌க்கிலிருந்து அரேபிய‌ர் வேறு நாட்டுக்கு போகும் போது த‌ம் க‌லாசார‌ ஆடை அணிந்தே செல்வ‌ர். இப்போது ஜ‌ம்ப‌ர்க‌ளுட‌ன் உலாவுகிறார்க‌ள். அதிலும் சில‌ ந‌ன்மைக‌ளும் உள்ள‌ன‌. என்ன‌தான் வெள்ளைக்கார‌ன் போல் ஜ‌ம்ப‌ர் அணிந்தாலும் கையில் சிக‌ர‌ட் இருக்கும். சிங்க‌ள‌ ம‌க்க‌ள் போல் உர‌க்க‌ ச‌த்த‌மிட்டு பேசுவ‌து அர‌பிக‌ள் க‌லாசார‌மாகும்.

பெரும்பாலான‌ நாடுக‌ளின் க‌லாசார‌ ஆடைக‌ள் குப்பைத்தொட்டிக்கு போய் வெறும் க‌ண்காட்சிக‌ளிலும், நிக‌ழ்வுக‌ளில் ம‌ட்டுமே ஆடை க‌லாசார‌ம் உள்ள‌து.
ஆனாலும் தொப்பி போடுத‌ல் என்ப‌து முழு உல‌க‌ முஸ்லிமின் க‌லாசார‌மாக‌ உள்ள‌து. அர‌பு, ம‌லேசியா, இந்தியா, இல‌ங்கை, ஐரோப்பா என‌ தொப்பி என்ப‌தும் க‌றுப்பு அபாயாவும் உல‌க‌ முஸ்லிம்க‌ளின் ஆடை க‌லாசார‌மாக‌ உல‌கால் அறிய‌ப்ப‌ட்டுள்ள‌து. அது ஒரு அழ‌கிய‌ க‌லாசார‌மாகும்.

முஸ்லிம்க‌ள் எத்த‌கைய‌ க‌லாசார‌ ஆடைக‌ளையும் அணிவ‌த‌ற்கு மார்க்க‌ம் அனும‌தித்துள்ள‌து. ந‌பிய‌வ‌ர்க‌ள் அமெரிக்காவில் பிற‌ந்திருந்தாலும் ஜுப்பா அணிந்திருப்பார்க‌ள். கார‌ண‌ம் ந‌பிய‌வ‌ர்க‌ள் பிற‌ந்த‌ அக்கால‌த்திற்கு முன்பிருந்தே கோட் சூட் இருக்க‌வில்லை. ஜுப்பாதான் உல‌கில் இருந்த‌து என்ப‌தை சோக்கிர‌ட்டீஸ், ஜீச‌ஸ் போன்றோரின் உடையிலிருந்து தெரிந்து கொள்கிறோம். தாடியும் அந்நாளில் இருந்த‌து.
ந‌பிய‌வ‌ர்க‌ள் தாடியை வைக்க‌ சொன்ன‌தால் அது சுன்ன‌த்தான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. ஒருவ‌ர் ந‌ன்மை க‌ருதி தாடி வைத்தால் அவ‌ருக்கு இறைவ‌னிட‌ம் நிச்ச‌ய‌ம் ந‌ன்மை உண்டு. ஊரானின் ம‌ரியாதைக்காக‌ தாடி வைத்தால் குற்ற‌ம். தாடி என்ப‌து நாடியில் முளைக்கும் ம‌யிர்க‌ளாகும். க‌ண்ண‌த்தில் முளைப்ப‌வை தாடி அல்ல‌.
ஆக‌வே தாடியை அழ‌காக‌ வைப்ப‌வ‌ர்க‌ளை யாரும் கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம். அத‌ற்காக‌ தாடியை ம‌ட்டும் பார்த்து ஒருவ‌ரின் ஈமானை எடை போட‌வும் வேண்டாம்.
ஒரு முஸ்லிமை அடையாள‌ப்ப‌டுத்துவ‌து அவ‌ன‌து ந‌ற்குன‌ங்க‌ள்தான். இதையே இஸ்லாமும் வ‌லியுறுத்துகிற‌து.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ம‌த‌னி.
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -