தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிட்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.!

உள்ளுராட்சி மகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் 

காரைதீவு நிருபர் சகா-
தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிட்சயமாக அனுமதிக்கமாட்டார்கள். அதனால்தான் தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர் என உள்ளுராட்சி மகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார்
சாய்ந்தமருது வெலிவோரியா வீட்டுத்திட்ட பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு கருதி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிடுவதற்கு நேற்று குறித்த பாடசாலைக்கு வருகை தந்திருந்தார் இவ்வேளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில்
சாய்ந்தமருதில் இடம்பெற்ற சம்பவம் ஆனது வெளிநபர்கள் இங்கு வந்து வீடுகளை வாடகைக்கு எடுத்து இங்க இருந்துள்ள பொழுது இங்குள்ள மக்கள் பொலிசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைத்தபொழுதே இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.
குறிப்பாக தற்பொழுது பாதுகாப்பு படையினர் இங்கு அமையப்பெற்றுள்ள வீடுகளை சோதனையிட்டு இவ்வாறான சம்பவத்திற்கு பொறுப்பான சூத்திரதாரிகள் பதுங்கி இருக்கின்றனரா? எனவும் தேடுதல் நடாத்தியிருந்தனர். குறித்த இடத்தில் வசித்துவந்த பொதுமக்கள் பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விடயங்கள் பல அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் இச்சோதனை முடிந்த பிற்பாடு அவரவர் வீடுகளில் தங்க வைப்பதற்கான எற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

குறிப்பாக இந்த சம்பவமானது உண்மையில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவமாகும் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகளை ஒருபோதும் முஸ்லிம்கள் நிற்சயமாக என்றும் அனுமதிக்கமாட்டார்கள். அதனால்தான் தாங்கள் இவ்வாறான தீவிரவாதிகள் சம்பந்தமான தகவல்களை வழங்கி அவர்களை பிடித்துக் கொடுப்பதற்கு தயாராகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசுக்கும் படையினருக்கும் இருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -