சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் இன்று கண்டன நிகழ்வுகள்

லங்கையின் பல்வேறு பகுதிகளில் மதஸ்தலங்கள் உட்பட ஏனைய இடங்களில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை வண்மையாக கண்டித்து சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசங்களில் இன்று கண்டன நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
இதனடிப்படையில் மேற்படி பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இயங்கவில்லையென்பதுடன் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் என்பன இணைந்து குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கும் பதாதைகளையும் காட்சிப்படுத்தியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது.
மேலும் இன்று நண்பகல் தொழுகையைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் நீங்கி அமைதி நிலவ வேண்டியும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -