அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஸாஹிருக்கு 'சிறந்த பொறியியலாளர்விருது'


றியாத் ஏ. மஜீத்-
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையினால் அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டஐந்தாண்டு (2013 – 2018) அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை குறித்த காலப்பகுதியினுள்நிறைவு செய்து மக்கள் பாவணைக்கு கையளித்தமையை பாராட்டி கிழக்கு மாகாண சுகாதார சேவைகள்பணிமனை அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிருக்கு'சிறந்த பொறியியலாளர் விருது' வழங்கி கௌரவித்துள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்திய சுகாதார அபிவிருத்தி ஐந்தாண்டு (2013-2018)வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு பங்களிப்புச் செய்த திணைக்களத் தலைவர்களைகௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை ஹிந்து கலாச்சார மண்டபத்தில் (02) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.அருள்குமரன் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துஇவ்விருதினை கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிருக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேயகுணவர்தன, கிழக்கு மாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், உள்ளிட்ட சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விருதினை பெற்றுக்கொள்வதற்கு பக்கத்துணை நின்ற கட்டடங்கள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், சுகாதார சேவைகள் மாகாணப் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்களத்தின்நிறைவேற்று பொறியியலாளர் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார சேவைகள்கல்முனை பிராந்திய பணிப்பாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், ஒப்பந்தகாரர்கள் அனைவருக்கும் இதன்போதுகட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் நன்றிகளைத் தெரிவித்தார்.

பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் தனது திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகளைஒப்பந்தகாரர்களைக் கொண்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடியவர். நிர்மாணப்பணி வேலைத்தளங்களிலும்காரியாலய நடைமுறையிலும் கடினமான போக்கை கடைப்பிடிக்கும் இவர் சிறந்த நிருவாகியும் உயரியநற்குணம் கொண்டவருமாவார்.
பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் தனது வேலைப்பழுக்களுக்கப்பால் சமூகம் சார்ந்த விடயங்களிலும் தன்னைஈடுபடுத்தி தன்னாலான உதவிகளை செய்துவருகின்றார் என்றால் அது மிகையாகாது.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -